full screen background image
Search
Sunday 2 August 2026
  • :
  • :
Latest Update

சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். லதா ராவ்

நான் நடிகை லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன்.

முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போல பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் 8,விவேக் & தேவயானி அவர்கள் நடிக்கும் எழுமின் படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *