“பயப்படாம கட்டிப்புடி ” ; ‘X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கூச்ச சுபாவத்தை போக்க கேமராவுக்கு முன் நின்ற ‘X வீடியோஸ்’ நடிகர்
கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட ‘X வீடியோஸ்’ நடிகர் ; பயம் போக்கிய லட்சுமிராய்..!
சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர். மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக.. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன்.
எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம்.. என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள்.. அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ‘புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது..
அந்தப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர் நட்பு கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய ‘x வீடியோஸ்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் அர்ஜுன்.
“பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நானோ நடிப்புக்கு புதியவன். அதிலும் லட்சுமிராயுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று வேறு காட்சிகள் .இருந்தது. ஆனால் லட்சுமிராய் தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்.
அதுமட்டுமல்ல இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன். இப்போது ‘x வீடியோஸ்’ படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை.. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்சசியாக இருக்கிறது” என்கிற அர்ஜுன், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.