Categories
Audio Launch Cinema News

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்

அஜ்மல் நடிக்கும் படம் ” நுங்கம்பாக்கம் ”

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு

” நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த்

இசை : ஷாம் டி ராஜ்

கலை : ஜெய்சங்கர்

எடிட்டிங் : மாரி

தயாரிப்பு நிர்வாகம் : k.சிவசங்கர்

கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார்…இவர் ஏற்கெனவே விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு மற்றும் தற்காப்பு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்.

தயாரிப்பு: S.K.சுப்பையா.

நுங்கம்பாக்கம் என்ன மாதிரியான கதையை உள்ளடக்கியது என்று இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வனிடம் கேட்டோம்…

நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை கதை.

நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம் அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும். பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குனரின் கற்பனைகள் மட்டுமல்ல.

அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாகவும் கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கும்.

நுங்கம்பாக்கம் முழுக்க முழுக்க கற்பனை கதை தான். அதில் கொஞ்சம் நிஜ சம்பவங்களும் கலந்திருக்கும். நான் சினிமாவுக்கு வந்து எதையும் சம்பாதிக்க வில்லை நிறைய இழந்திருக்கிறேன். நிம்மதியையும் சேர்த்து ஜெயிக்கனும்கிற வெறி இருக்கு

உழைக்கவும் செய்கிறேன் வெற்றி அருகில் தான் இருக்கிறது. அந்த வெற்றிக்கனியை இதில் பறிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நிறைய பிரச்சனைகளை இந்தப் படத்தில் நான் சந்தித்திருக்கிறேன் .. சென்சார் செய்யப் பட்டு U/A கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த தித்தீர் பிலிம்ஸ் k.ரவிதேவன் படத்தின் மொத்த உரிமையை பெற்றிருக்கிறார்கள் என்றார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *