full screen background image
Search
Saturday 5 September 2026
  • :
  • :
Latest Update

பிப்ரவரி மாதம் தமிழ் – தெலுங்கில் வெளியாகும் “ பொட்டு “

பிப்ரவரி மாதம் தமிழ் – தெலுங்கில் வெளியாகும்

“ பொட்டு “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – செந்தில் / ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ்

இசை – அம்ரீஷ் / பாடல்கள் – விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்

ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் – எலீசா

கலை – நித்யானந் /நடனம் – ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான்.

மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படாமாக உருவாகி உள்ளது “ பொட்டு “

தமிழில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு U/ A பெற்று, தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த பொட்டு நேற்று தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு U/ A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *