‘டிரோன்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Cast & Crew:
Cast: Dravid Selvam, Siddi Idnani, Anjali Nair, Devadarshini, Cinemawala Sathish, RJ Deepak, Qureshi, Sasi Selvaraj
Music: Hari S.R.
Cinematography: Jayanth Sethu Madhavan
Editing: Sathish Surya
Art Direction: R. Kishore
Costume Design: Harshika Ramesh
Written & Directed by: R. Raghav Mirdath
Production: G.M. Morgan Films
Producer: G.M. Morgan
‘டிரோன்ஸ்’ அறிவியல் கற்பனை காதல் மற்றும் நகைச்சுவையுடன் சமூக சிந்தனையையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும் டிராவிட் செல்வம் அஞ்சலி நாயர் மற்றும் ஆர்ஜே தீபக் ஆகியோர் பெற்றோருக்கு தெரியாமல் பத்து நாட்கள் வெளியே தங்குவதற்காக பிளாக் ஹோல் என்ற வீட்டிற்குள் செல்கிறார்கள். அங்கு சிக்கிக்கொள்ளும் அவர்கள் டிரோன் மூலம் வெளியுலகத்தை பார்க்கும்போது சித்தி இத்னானியை டிராவிட் காதலிக்க தொடங்குகிறார். ஆனால் அந்த பெண்ணின் பின்னணியில் இருக்கும் மர்மமும் சூனியக்காரி பாட்டியாக வரும் தேவதர்ஷினியின் செயல்களும் கதையை வேறு பாதைக்கு கொண்டு செல்கின்றன.
டிராவிட் செல்வம் நகைச்சுவையான நடிப்பால் ஓரளவு கவனம் ஈர்க்கிறார். சித்தி இத்னானி தனது தோற்றத்தால் கவர்ந்தாலும் அஞ்சலி நாயர் உணர்ச்சிகரமான நடிப்பால் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார். தேவதர்ஷினி தனது அனுபவமான நடிப்பால் மிரட்டுகிறார். சினிமாவாலா சதீஷ் மற்றும் மற்ற நடிகர்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் ஹரி எஸ் ஆர் வழங்கிய பின்னணி இசையும் படத்திற்கு ஓரளவு பலம் சேர்க்கின்றன.
அழகை வைத்து ஒருவரை மதிப்பிடுவது மற்றும் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது போன்ற விஷயங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்வதுடன் சில காட்சிகள் செயற்கையாகவும் சுவாரஸ்யம் குறைந்தும் இருக்கின்றன. இரண்டாம் பாதியில் கதை வேகம் எடுப்பதோடு கடைசி பகுதிகளில் வரும் திருப்பங்களும் சமூக கருத்தும் கவனம் ஈர்க்கின்றன.
மொத்தத்தில்,’டிரோன்ஸ்’ வித்தியாசமான கதைக்களமும் நல்ல கருத்தும் இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் டிரோன்ஸ் திரைப்படம் சிறப்பான அனுபவமாக அமைந்திருக்கும்.







