Categories
Cinema News

இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சிகள்,சென்னையில் புதிய அடையாளத்தை உருவாக்கும் மாயா பஜார் ஹப்

இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சிகள்..; சென்னையில் புதிய அடையாளத்தை உருவாக்கும் மாயா பஜார் ஹப்

தமிழ் திரைப்பட இசை கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளனர்.

மாயா பஜார் நிறுவனம் தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில் திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *