’29’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Cast & Crew:
🎬 Starring: Vidhu, Preethi Asrani, Avinash, Master Mahendran, Kiran, Sindhu Shyam & others.
🎥 Written & Directed by Rathna Kumar
🏢 Produced by Kaarthikeyan.S & Lokesh Kanagaraj
🎶 Music by Sean Roldan
📷 DOP: Madhesh Manickam
✂️ Editing: R.S. Sathish Kumar
🎨 Art: Shanmugaraj
🔥 Stunts: Don Ashok
🏷️ Production: Stone Bench Studio & G Squad
🎞️ Tamil Nadu Release: White Carpet Films.
’29’ ஒரு சாதாரண காதல் படமா ஆரம்பிச்சாலும், காதலை தாண்டி வாழ்க்கை, அடையாளம், லட்சியம், சுய தேடல் மாதிரியான விஷயங்களை ரொம்ப உணர்ச்சிப்பூர்வமாக பேசுற படம். 29 வயசுல வாழ்க்கையில் என்ன செய்யணும், நாம யார், நமக்கான அடையாளம் என்னன்னு குழப்பத்துல இருக்கும் இளைஞர்களின் மனநிலையை இயக்குனர் ரத்னகுமார் இயல்பாக காட்டியிருக்கிறார்.
நாயகன் விது, வாழ்க்கையில் எந்த தெளிவும் இல்லாமல் காதலையே தனது உலகமா நினைக்கிற இளைஞனாக நல்ல நடிப்பு கொடுத்திருக்கிறார். காதலில் உருகுற காட்சிகளிலும், பிரிவுக்குப் பிறகான மன வேதனையிலும் ரொம்ப இயல்பாக தெரிகிறார். நாயகி பிரீத்தி அஸ்ரானி படம் முழுக்க பெரிய பலம். காதல், கோபம், ஏமாற்றம், அக்கறை எல்லாத்தையும் கண்களாலேயே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரொம்ப நேச்சுரலாக வேலை செய்திருக்கிறது.
படத்தின் முதல் பாதி முழுக்க காதல், உறவு, இளமை உணர்வுகள் மாதிரி விஷயங்களை மெதுவாகவும் கவிதை மாதிரியும் கொண்டு போகிறது. சில காட்சிகள் நம்ம வாழ்க்கையில நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் காதலை தாண்டி வாழ்க்கையில் சாதிக்கணும் என்ற கருத்தை பேச முயற்சிக்கிறது. சில இடங்களில் ஹீரோ வில்லன் டெம்ப்ளேட், அதிகமான வாய்ஸ் ஓவர் மாதிரியான விஷயங்கள் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் பாதிக்கிறது.
ஷான் ரோல்டன் இசை படத்துக்கு பெரிய பலம். பாடல்களும் பின்னணி இசையும் காதலின் சந்தோஷத்தையும் வலியையும் அழகாக கடத்துகிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கடற்கரை, பேருந்து பயணம், சென்னை வாழ்க்கை எல்லாத்தையும் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ’29’ காதல் கதைகளையும், வாழ்க்கையை பற்றி சிந்திக்க வைக்கும் படங்களையும் விரும்புறவர்களுக்கு இந்த படம் நல்ல அனுபவமாக இருக்கும்.

























