full screen background image
Search
Sunday 19 April 2026
  • :
  • :
Latest Update

‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்பட விமர்சனம்

‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Jayaprakash, Kaali Venkat, Raiza, Athulya, Anagha, Manju Warrier, Gautham Ram Karthik, Sarath Kumar, Arya

Directed By : Manu Anand

Music By : Dhibu Ninan Thomas

Produced By : Shri Vineet Jain, S Lakshman Kumar

‘மிஸ்டர் எக்ஸ்’ இந்தியாவின் ரா அமைப்பை சேர்ந்த உளவாளிகள், அணு ஆயுதத்துடன் தொடர்புடைய ஒரு ஆபத்தான சாதனத்தை பாதுகாக்கும் மிஷனில் ஈடுபடுகிறார்கள். அந்த சாதனம் ரஷ்யா கைக்கு சென்று, பாகிஸ்தானுடன் சேர்ந்து பெரிய சதித்திட்டம் தீட்டப்படும்போது, அதை தடுக்க இந்திய உளவுத்துறை முயற்சி செய்கிறது. அந்த மிஷனில் சிக்கிக் கொள்ளும் சரத்குமார், அவரை காப்பாற்ற செல்லும் ஆர்யா மற்றும் அவரின் குழு, அதில் வரும் துரோகம், திருப்பங்கள் ஆகியவை தான் கதையின் மையம்.

கதையில் பல அடுக்குகள் இருக்கிறது. உளவாளிகள், டபுள் கேம், குடும்ப பின்னணி, உலக அரசியல் பிரச்சனை, அணு ஆயுத அச்சுறுத்தல் என பல விஷயங்களை சேர்த்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அவை எல்லாம் ஒரே நேரத்தில் அதிகமாக வந்து, கதை கொஞ்சம் குழப்பமாகவும், சில இடங்களில் நம்ப முடியாத மாதிரியும் தோன்றுகிறது.

ஆர்யா உடல்திறன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நல்லா பொருந்துகிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அவரது ஸ்க்ரீன் பிரெசென்ஸ் நல்லா இருக்கிறது. ஆனால் நடிப்புக்கு அதிக வாய்ப்பு இல்லாததால், அந்த பகுதி சாதாரணமாகவே தெரிகிறது. கௌதம் கார்த்திக் வில்லன் வேடத்தில் வேறுபட்ட முயற்சி எடுத்திருக்கிறார். சில இடங்களில் நல்லா இருந்தாலும், முழுக்க முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார், ஆனால் அந்த வேடம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக மனதில் நிற்கவில்லை.

மஞ்சு வாரியர் ஒரு அதிகாரியாக சீரியஸான ரோலில் வந்து கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார். மற்ற நடிகர்கள் பலர் இருந்தாலும், யாருக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை.

டெக்னிக்கல் பக்கம் பார்த்தால், ஒளிப்பதிவு மற்றும் லொக்கேஷன்கள் நல்லா இருக்கிறது. இசை மற்றும் பின்னணி இசையும் சராசரியாக காட்சிகளுக்கு உதவுகிறது. எடிட்டிங் சில இடங்களில் வேகமாக இருந்தாலும், சில இடங்களில் கதை நீளமாக இழுத்தது போல உணர்ச்சி வருகிறது.

படத்தின் பெரிய குறை என்னவென்றால், லாஜிக் குறைவு. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு எளிதாக போவது, பெரிய ஆபத்தான பொருளை சுலபமாக கையாள்வது போன்ற விஷயங்கள் நம்பகத்தன்மையை குறைக்கிறது. அதே நேரத்தில் பல திருப்பங்கள் இருந்தாலும், அவை பல இடங்களில் முன்பே தெரிந்துவிடுகிறது.

மொத்தத்தில்,’மிஸ்டர் எக்ஸ்’ ஆக்ஷன் காட்சிகள் மட்டும் பார்க்க விரும்புபவர்களுக்கு ஒருமுறை பார்க்கலாம். ஆனால் ஆழமான கதை அல்லது நம்பகத்தன்மை எதிர்பார்ப்பவர்களுக்கு படம் சற்று குறைவாக தோன்றும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *