‘ரூம் பாய்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : C.Nikhil, Harsha, Imman Annachi, Birla Bose, Katrhu Karuppu kalai, Karpagam, Kavitha Vijayan, Sameer, Arun Raja, City Raja, Prabhakar
Directed By : Jegan Rayan
Music By : Velavan Sahadevan
Produced By : ACM Cinemas – Suriyakala Chandramurthy
‘ரூம் பாய்’ கதையின் மையம் ஹோட்டல்களில் நடக்கும் ரகசிய மோசடிகள் மற்றும் ஒரு இ ளைஞனின் பழிவாங்கும் பயணம்.
சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து வெளியே வரும் நாயகன் நிகில், ஏலகிரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறார். அங்கே நடக்கும் மறைமுக கேமரா மூலம் வீடியோ எடுத்து பணம் பறிக்கும் மோசடி, பெண்கள் மீது நடக்கும் தவறான செயல்கள் போன்ற விஷயங்களை அறிகிறார். இதற்கிடையில் ஹோட்டல் மேனேஜர் கொலை மற்றும் சீர்திருத்த நிலைய வார்டன் மாயம் ஆகிய சம்பவங்கள் நடக்க, இந்த இரண்டுக்கும் நிகிலுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வியோடு கதை நகர்கிறது.
நாயகன் நிகில் ஒரு சாதாரண இளைஞனாக இருந்து, குடும்பத்தை இழந்த பின் பழிவாங்கும் மனநிலையில் மாறும் விதம் கதைக்கு ஒரு உணர்ச்சி பக்கத்தையும் தருகிறது. அதே நேரத்தில் திரில்லர் அம்சங்களும் சேர்ந்து கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. முதல் பாதி சுமாராக சென்றாலும், இரண்டாம் பாதியில் தான் கதை வேகம் பிடித்து, திருப்பங்கள் அதிகரிக்கிறது.
நடிப்பில் நிகில் தனது முதல் படத்திலேயே நன்றாக முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக இருக்கிறார். நாயகி ஹர்ஷாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும், வரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர், குறிப்பாக வார்டன் கதாபாத்திரம் நினைவில் நிற்கும்.ஒளிப்பதிவு பெரும்பாலும் உள்ளக காட்சிகளாக இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நன்றாக எடுத்துள்ளனர். பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. எடிட்டிங் தான் படத்திற்கு பெரிய பலம், குறிப்பாக இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக நகர உதவுகிறது.
பட்ஜெட் குறைவாக இருந்தாலும், இயக்குநர் சொல்ல வந்த கதையை குழப்பமில்லாமல் தெளிவாக சொல்லியிருக்கிறார். சில இடங்களில் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்ற உணர்வு இருந்தாலும், மொத்தத்தில் ஒரு சராசரி திரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது.
இந்த படம் பார்த்த பிறகு, ஹோட்டலில் தங்கும்போது அறையை ஒரு முறை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் வரும். ஒருமுறை பார்க்கலாம் என்று சொல்ல வைக்கும் படம் தான் ரூம் பாய்.





















