‘காக்கி சர்க்கஸ்’ ரேட்டிங்: 3/5
Casting : Subash Selvam, Munishkanth, Rajesh Madhavan, Gowthami, Vinsu Rache, Savithri, Amrudha, Abdul Lee, Maruthupandiyan, Rakesh, Ushar, Vigneshwar, Arunkumar, Pavumba, Chiththirasenan
Directed By : Ameen Barif
Music By : Vibin Baskar and Xavier
Produced By : Rise East Entertainment – Sreenidhi Sagar
‘காக்கி சர்க்கஸ்’ சிறைச்சாலை ஜெயிலராக இருக்கும் முனீஷ்காந்த் கைதிகளை புத்தகம் படிக்க வைத்து திருத்தணும் என்று நம்புறவர். அவருக்கு எதிராக சுபாஷ் செல்வம் கொஞ்சம் கடுமையான போலீஸ் மனப்பான்மையோட இருப்பவர். இந்த இரண்டு மனநிலைகளும் கதைக்கு நல்ல அடிப்படை கொடுக்குது.
கதை ஒரு சின்ன சம்பவத்திலிருந்து துவங்குது. சிறைச்சாலைக்குள்ள இருக்கிற கோவில் உண்டியலில் இருந்து பணம் திருடப்படுது. அந்த ஒரு விஷயத்தை மையமாக வைத்து கதை நகரும் போது அது சாதாரண விசாரணை மாதிரி இல்லாமல் கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம் வித்தியாசமான கற்பனை மாதிரி கலந்து போகுது. சில இடங்களில் இது ரொம்ப சுவாரஸ்யமா வேலை செய்யும் ஆனா சில இடங்களில் கொஞ்சம் குழப்பமா இருக்கும்.
நடிப்பைப் பற்றி சொன்னா முனீஷ்காந்த் ரொம்ப கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பை கொடுத்திருக்கார். அவர் வழக்கமான காமெடியை குறைத்து கதாபாத்திரத்துக்கு தேவையான அளவிலேயே நடித்திருக்கார். சுபாஷ் செல்வம் போலீஸாக சரியாக பொருந்தி இருக்கார். காமெடியும் ஆக்ஷனும் இரண்டையும் சமநிலையா செய்து கதையை முன்னோக்கி இழுத்து செல்றார். திருடனாக வரும் ராஜேஷ் மாதவன் சிம்பிளா இருந்தாலும் தனக்கு தனி ஸ்டைல் கொண்டு வர்றார். பணத்துக்காக இல்லாமல் ஒரு விதமான திரில் காக திருடுற கேரக்டர் கொஞ்சம் புதுசா தோணும்.
தொடரில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கும் மாதிரி அமைந்திருக்காங்க. குறிப்பாக சின்ன சின்ன காமெடி ட்ராக்ஸ் சில சமயம் கதையை தள்ளி வைக்கிற மாதிரி இருந்தாலும் பார்க்க சிரிப்பு தரும். அதே நேரத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நீளும் மாதிரி உணர்வு வரும்.
டெக்னிக்கலா பார்த்தா ஒளிப்பதிவு இசை எடிட்டிங் எல்லாம் சேர்ந்து தொடரை ஓவரா இல்லாமல் நல்ல அளவுக்கு பிடிக்க வைக்குது. குறிப்பா சிறைச்சாலை சூழல் நன்றாக காட்டப்பட்டிருக்கு.
ஆனா இந்த தொடரின் பெரிய குறை என்னனா எழுத்து. நிறைய ஐடியாஸ் இருக்கிறது ஆனா அவை எல்லாம் சரியாக இணைக்கப்படல. சில விஷயங்கள் ஆரம்பிச்சு நடுவுலவே மறைந்து போகுது. குறிப்பா கற்பனை கலந்த சில சீன்கள் ஏன் வந்தது என்ன பயன் என்ற கேள்வி இருக்கும். அதே மாதிரி வேகம் ஒவ்வொரு எபிசோடுக்கும் மாறிக்கொண்டே இருக்கும்.
இருந்தாலும் முழுக்க முழுக்க போரடிக்காது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியணும் என்ற ஆர்வம் வைத்தே பார்க்க வைக்குது. சிரிப்பு தரும் இடங்களும் இருக்குது த்ரில்லர் உணர்வும் கொஞ்சம் கொடுக்குது.
மொத்தத்தில், ‘காக்கி சர்க்கஸ்’ எல்லாருக்கும் பிடிக்காது ஆனா புதுசா வேற மாதிரி ஏதாவது பார்க்கணும் என்று நினைப்பவர்களுக்கு ஓரளவுக்கு ரசிக்கலாம்.




















