full screen background image
Search
Monday 9 March 2026
  • :
  • :
Latest Update

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்பட விமர்சனம்

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Madumkesh, JiyaShankar, Arjun Ashokan, MS Bhaskar

Directed By : Vijay

Music By : Harris Jayaraj

Produced By : D Studios & Maali and Manvi Movie Makers

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ கதையில் அதிதி என்ற இளம் பெண் இசை மீது ஆர்வம் கொண்டவர். ஒரு இசை குழுவில் பாடும் அவர் ஹரி என்ற இளைஞனை காதலிக்கிறார். ஆனால் சிறு வயது முதல் அதிதியை தூரத்தில் இருந்து பார்த்து ஒருதலையாக காதலித்து வரும் சித்தார்த் என்ற இளைஞனும் இருக்கிறார். ஒரு இசை போட்டிக்காக ஸ்காட்லாந்து செல்லும் அதிதிக்கு அங்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் அவருக்கு அன்டிரோக்ரேட் அம்னீசியா என்ற நினைவிழப்பு பிரச்சினை வருகிறது. அதாவது நேற்று நடந்ததை இன்று நினைவில் வைத்திருக்க முடியாத நிலை. ஒவ்வொரு நாளும் அவருக்கு புதிய நாளாக தான் தொடங்குகிறது.

இந்த சூழ்நிலையில் அதிதியை காப்பாற்றி கவனித்து வரும் சித்தார்த் தான் அவருடைய காதலன் என்று பொய் சொல்லி அவருடன் வாழ ஆரம்பிக்கிறார். ஆனால் உண்மையான காதலன் ஹரி பின்னர் அங்கு வரும்போது யார் உண்மையான காதலன் என்ற குழப்பம் அதிதியின் வாழ்க்கையில் உருவாகிறது. நினைவிழப்பு பிரச்சினையுடன் இருக்கும் அதிதி இந்த இருவரில் யாருடைய காதல் உண்மையானது என்று புரிந்து கொள்வது தான் படத்தின் மையக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் நாயகியாக நடித்திருக்கும் ஜியா சங்கர். அழகாகவும் துறுதுறுப்பாகவும் இருக்கும் அவர் நினைவிழப்பு பிரச்சினையால் குழம்பும் பெண்ணாக பல காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் புதிதாக எல்லாவற்றையும் கேட்டு அறிந்து கொள்வது போன்ற காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இந்த படம் முழுவதும் அவரை சுற்றியே கதை நகர்கிறது.


சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதும்கேஷ் அமைதியான மற்றும் உள்ளுக்குள் காதலை வைத்துக் கொண்டு வாழும் இளைஞராக நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அவரது நடிப்பு சற்று உணர்ச்சி குறைவாக தோன்றுகிறது. ஹரியாக வரும் அர்ஜுன் அசோகன் தனது வேடத்தை சரியாக செய்திருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் பெரிதாக வலுவாக அமைக்கப்படவில்லை.

ஜெயப்பிரகாஷ், எம் எஸ் பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் கதைக்கு தேவையான ஆதரவை கொடுக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஸ்காட்லாந்தின் அழகான இடங்களை காட்சிகளில் நன்றாக பதிவு செய்திருக்கிறார். வெளிநாட்டு பின்னணி காரணமாக படம் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மென்மையான காதல் பாடல்களாக இருக்கிறது. சில பாடல்கள் அவரது பழைய இசை பாணியை நினைவுபடுத்தினாலும் காதல் காட்சிகளுக்கு ஏற்ற உணர்ச்சியை கொடுக்கிறது.

இயக்குநர் ஏ எல் விஜய் செண்டிமெண்ட் மற்றும் காதல் கதைகளை சொல்லும் தனது பாணியில் இந்த படத்தையும் அமைத்திருக்கிறார். நினைவிழப்பு என்ற கதைக்களம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை வந்த ஒன்று என்பதால் கதை புதியதாக தோன்றவில்லை. சில காட்சிகள் முன்பே யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதும் ஒரு குறையாக தெரிகிறது. சில லாஜிக் கேள்விகளும் படத்தில் தோன்றும்.

அதையெல்லாம் மீறி ஒரு மென்மையான காதல் கதையாக படம் நகர்கிறது. குறிப்பாக நாயகியின் நடிப்பு மற்றும் வெளிநாட்டு பின்னணி காட்சிகள் படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில்,’காதல் ரீசெட் ரிப்பீட்’ புதிய கதை எதிர்பார்க்காமல் மென்மையான காதல் கதையை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த படம் ஓரளவு பிடிக்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *