full screen background image
Search
Saturday 28 February 2026
  • :
  • :
Latest Update

மலைவாழ் மக்களின் போராட்டத்தை சொல்லும் 32 சர்வதேச விருது பெற்ற “போஸ்ட் கார்டு” – எம்பி முத்துப்பாண்டியின் அதிரடி நடிப்பு | Saravana Sakthi 🎬🏆

“போஸ்ட் கார்டு” (Independent Film)

பில்லா பாண்டி, குலசாமி, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குநரும் நடிகருமான குட்டிப்புலி சரவண சக்தி அவர்களின் இயக்கத்தில், சக்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இன்டிபெண்டென்ட் திரைப்படம் தான் “போஸ்ட் கார்டு”.

ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும், குலசாமி, அயலி போன்ற 40-க்கும் மேற்பட்ட படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் MP முத்துப்பாண்டி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் பேராசிரியர் ராமசீனிவாசன், ரிஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

🎬 படக்குழு விவரங்கள்

இயக்கம்: சரவண சக்தி

இணை இயக்குநர்கள்: MP முத்துப்பாண்டி, சங்கரபாண்டி

அசோசியேட் இயக்குநர்: கார்த்திக்

கிரியேட்டிவ் ஹெட்: பேராசிரியர் ராம சீனிவாசன்

ஒளிப்பதிவு: MRM ஜெய் சுரேஷ், மகேஷ் தியாகு

இசை: பிரித்திவி

பாடலாசிரியர்: சீர்காழி சிற்பி

பாடல்: ரிக்ஷிதா ஜவகர்

எடிட்டிங்: ராஜவர்மன்

🎥 கதையின் மையம்

இந்த திரைப்படம் நாட்டின் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் கூட போராட்டமாக மாறியுள்ள உண்மை நிலையை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் இயக்குநர் சரவண சக்தி.

காட்சியமைப்பு, இயல்பான மனிதர்கள், இசை, பாடல்கள் அனைத்தும் நம் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதியும் வகையில் அமைந்துள்ளன. இது இயக்குநரின் முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு முயற்சி.

🌟 நடிப்பின் சிறப்புகள்

கதாநாயகனாக நடித்துள்ள MP முத்துப்பாண்டியின் நடிப்பு படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.

மனைவியின் உயிரைக் காப்பாற்ற போராடும் கணவன்

மனைவியின் மரண வேதனையை தாங்க முடியாத மனிதன்

தாயில்லா பிள்ளைகளை வளர்க்க போராடும் தந்தை

மகளின் பயந்த மனதை கேட்டு மனம் உடையும் அப்பா

தனது காட்டையும் மக்களையும் நேசிக்கும் மனிதநேய உணர்வு

பஞ்சாயத்து தலைவரால் ஏமாறும் எளிமை

“காடு தான் என் வீடு” என்று உறுதியுடன் நிற்கும் வீரியம்

இவ்வெல்லா பரிமாணங்களிலும் அவர் எதார்த்தமாக கரைந்து நடித்துள்ளார். இனி இவரை கதாநாயகனாக தொடர்ந்து பார்க்கலாம் என்பதில் ஐயமில்லை.

அவருடன் மகளாக நடித்துள்ள துளசி (பவித்ரா), வில்லனாக வரும் ரிஷி, நேர்மையான அரசியல்வாதியாக பேராசிரியர் ராம சீனிவாசன், ஹோட்டல் உரிமையாளராக அமிர்தலிங்கம், பிரதமர் மோடி வேடத்தில் வியாஸ் குமார் உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பின் உச்சத்தை தொட்டுள்ளனர்.

🏆 சாதனைகள்

இந்தப் படம் ஏற்கனவே 32 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. இதுவே தொடக்கம் மட்டுமே; மேலும் பல விருதுகள் இந்தப் படைப்பை சென்றடையும் என்பது உறுதி.

✨ முடிவுரை

ஒரு “போஸ்ட் கார்டு” மூலம் ஒரு முழு கிராமத்தின் மாற்றத்தை எதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் சரவண சக்தி.

மொத்தத்தில் இது ஒரு சாதாரண “போஸ்ட் கார்டு” அல்ல —
இது ஒரு “கோல்ட் கார்டு!”

காண தவறாதீர்கள்! 🎬




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *