full screen background image
Search
Monday 9 February 2026
  • :
  • :
Latest Update

Salute to Mothers – 15வது ஆண்டு விழா -சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

Salute to Mothers – 15வது ஆண்டு விழா -சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் Salute to Mothers நிகழ்ச்சி, இந்த ஆண்டும் தாய்மையின் மகத்துவத்தை போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. தாயை ஒரு உறவாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் சமூக மதிப்பாகவும் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் அர்த்தமுள்ள சமூக விழாவாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு பத்மபூஷன் திரு நல்லி குப்புசாமி செட்டி, பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் வி. காமகோட்டி, திரு ராமதாச ராவ் மற்றும் பத்மஸ்ரீ எழுத்தாளர் திருமதி சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் வி. காமகோட்டி மற்றும் திருமதி சிவசங்கரி ஆகியோர் இணைந்து கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சியாக இது அமைந்ததால், நிகழ்ச்சியின் பெருமையும் பிரகாசமும் மேலும் உயர்ந்தது.

நிகழ்ச்சி ஆன்மிகத் துவக்க அம்சங்களுடன் தொடர்ந்தது. நிகழ்ச்சியின் இடைவேளைகளில், Bhanjans By NKM Trust Group வழங்கிய பஜன்கள், விழாவிற்கு ஆன்மிகத் தன்மையையும் அமைதியான சூழலையும் சேர்த்தன.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் திரு எம். முரளி அவர்கள் வரவேற்புரையில், தமது வாழ்க்கையும் தொழில்துறையும் தமது பெற்றோர் கற்றுத்தந்த மதிப்புகளின் அடிப்படையிலேயே உருவானவை எனக் குறிப்பிட்டார். வாழ்க்கையில் எப்போதும் எந்தத் தவறும் செய்யக் கூடாது என்றும், தொழிலில் நேர்மை மற்றும் ஒழுக்கமே அடிப்படை என்றும் தமது பெற்றோர் கற்றுத்தந்ததுதான், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இன்று நம்பிக்கையின் அடையாளமாக விளங்கக் காரணம் என அவர் கூறினார். சமூக சேவையில் 1996 முதல் தொடர்ந்து ஈடுபட்டு, 15,000-க்கும் மேற்பட்ட சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்ததற்காக, அவருக்கு ICWR – Ingenious Charm World Records அமைப்பின் உலகச் சாதனை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பல்வேறு துறைகளில் சாதனை purinda prabalangalin தாய்மார்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சந்தீப் நாராயண் அவர்களின் தாய், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் அவர்களின் பாட்டி, உபந்யாசகர் U. வே. வெங்கடேஷ் அவர்களின் தாய், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT), சென்னை பெஞ்சின் மாண்புமிகு நீதியரசர் திரு எம். ஸ்வாமிநாதன் அவர்களின் தாய், கல்யாணமாலை நிறுவனர் குழுவைச் சேர்ந்த திருமதி மீரா நாகராஜன் அவர்களின் தாய் ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 14 தாய்மார்கள் மேடையிலேயே சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.

90 வயது நிரம்பிய தம்பதியரின் ஆசீர்வாதம், பல்வேறு கோவில்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரசாதங்கள், குழந்தைகள் தங்களது கைகளால் தாய்மார்களுக்கு மாலை அணிவித்த தருணங்கள், மாத்ருபூஜை மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் ஆகியவை விழாவை ஆழமான உணர்வுகளால் நிறைந்த அனுபவமாக மாற்றின.

தாயை போற்றுவது மனிதநேயத்தைப் போற்றுவது என்ற கருத்தை சமூகத்திற்கு வலுவாக எடுத்துச் செல்லும் வகையில், Salute to Mothers – 15வது ஆண்டு விழா, தாய்மையை மையமாகக் கொண்ட ஒரு சிறப்புமிக்க பண்பாட்டு மற்றும் சமூக விழாவாக அமைந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *