full screen background image
Search
Thursday 11 June 2026
  • :
  • :
Latest Update

‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்

‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட ரேட்டிங்: 3/5

நடிப்பு: ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், அஜய், சரவண சுப்பையா, சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பாபு விஜய்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

படத்தொகுப்பு: டார்லிங் ரிச்சர்டுசன்

இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

கலை: கண்ணன் எஸ்

ஸ்டண்ட்: முரளி ஜி

நடனம்: சாண்டி

தயாரிப்பு: பிவி ஃபிரேம்ஸ்

வழங்கல்: பிவி ஷர்மிளா

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

திரைப்படத்தின் பெயருக்கேற்ற மாதிரி ரொமான்ஸ், த்ரில்லர், சென்டிமென்ட், கமர்ஷியல் எல்லாத்தையும் கலந்து ஒரு கலவை படமாக வந்திருக்கிறது சட்டென்று மாறுது வானிலை. ஜெய் வழக்கமான காதல் ஹீரோ ஸ்டைலில் எளிதாக நடித்திருக்கிறார். சில இடங்களில் விஜய் மேனரிசத்தை பின்பற்றியிருப்பது கவனிக்கப்படும். அது சில காட்சிகளில் வேலை செய்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக தோன்றுகிறது. ஆனாலும் காதல், கோபம், சென்டிமென்ட் போன்ற காட்சிகளில் ஜெய் தனது அனுபவத்தை காட்டியிருக்கிறார்.

மீனாட்சி கோவிந்தராஜன் இந்த படத்தின் பெரிய பலமாக இருக்கிறார். கிளாமர் மட்டும் இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். ஜெய்யுடன் வரும் காதல் மற்றும் கணவன் மனைவி காட்சிகளில் நல்ல இயல்பான நடிப்பு தெரிகிறது. கருடா ராம் வில்லனாக கொடூரமான டார்க் வெப் தொழிலை நடத்தும் மனிதராக வந்திருக்கிறார். அந்த கதைக்களம் படத்துக்கு ஒரு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. யோகி பாபு வழக்கம்போல் இடையிடையே சிரிக்க வைக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படம் முழுக்க ரிச் லுக் கொடுக்கிறது. கொடைக்கானல் ரிசார்ட் காட்சிகள், ரொமான்டிக் ஃபிரேம்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையும் பின்னணி இசையும் பல காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

கதையில் காதல், அரசியல், சொத்து பிரச்சனை, டார்க் வெப் குற்றங்கள், ஈகோ பிரச்சனை என்று நிறைய விஷயங்களை சேர்த்திருப்பதால் சில இடங்களில் திரைக்கதை தடுமாறுகிறது. தேவையில்லாத சில வில்லன் ட்ராக்களும் லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. ஆனாலும் கிளைமாக்ஸ் ஐடியா சுவாரஸ்யமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம் என்ற உணர்வு வரும்.

மொத்தத்தி,’ காதல், கமர்ஷியல் அம்சங்கள், அழகான காட்சிகள், இசை, த்ரில்லர் டச் ஆகியவற்றுக்காக ஒருமுறை பார்க்கக்கூடிய படம் தான் சட்டென்று மாறுது வானிலை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *