‘க்ராணி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Cast
Vadivukkarasi
Dhileepan
Singam Puli
Gaja Raja
Ananthu Nag
Aparna
Master Ghanshyam
Baby Sandrea
Crew
Production Company: Vijay Mary Universal Media
Producer: T. Vijayamary
Distribution Company: Hari Uthara Productions
Music Audio Company: Kalaippuli International Audio
Written & Directed by: Vijaya Kumaran
Director of Photography: A. Manikandan
Music Director: Dr. Chelliah Pandian
Editor: MS. Gopi
Lyrics & Dialogues: KU Karthik
Co-Producer: T. Saravanan
PRO _ Sathish (AIM)
‘கிரானி’ ஒரு பதற்றத்தை உருவாக்கும் தமிழ் திகில் திரில்லர் படம். ஒரு அமைதியான கிராமத்தில் நடக்கும் ஒரு குழந்தையின் மர்மமான மரணம் தான் கதைக்கு ஆரம்பம். அந்த மரணத்தை விசாரிக்க போலீஸ் வர்றாங்க. அதே நேரத்தில் லண்டன்ல இருந்து வந்த ஒரு டெக்கி தம்பதி தங்களோட இரண்டு குழந்தைகளோட பூர்விக வீட்டுக்கு குடியேறுறாங்க. அந்த வீட்டுக்குள்ள நுழையும்போது ஒரு வயசான பாட்டி மயங்கி விழுந்து கிடக்குறாங்க. மனிதாபிமானத்தோட அந்த பாட்டியை வீட்டுக்குள்ள தங்க வைக்குறாங்க. ஆனா அந்த பாட்டி சாதாரணவள் கிடையாது.
வடிவுக்கரசி நடிச்சிருக்க அந்த பாட்டி தான் ஒச்சை. இந்த வீட்டோட பழைய உரிமையாளர் அவங்களோட கணவர். அவர் இளமையா இருக்க மந்திரவாதம் சூனியம் எல்லாம் பண்ணி குழந்தைகளோட உயிரை பலி கொடுத்திருக்கார். அந்த ரகசியம் வெளிச்சத்துக்கு வந்ததும் கிராம மக்கள் அவரை உயிரோட எரிச்சு கொன்னுடுறாங்க. ஆனா அவர் இறக்கும் முன் தன்னோட மனைவியை இதே பாதையில போக சொல்றார். அதனால இப்போ அந்த பாட்டி மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து அதே இருண்ட சடங்குகளை தொடர முயற்சி பண்றாங்க. இதுல அந்த டெக்கி தம்பதியோட குழந்தைகள் பெரிய ஆபத்துல சிக்குறாங்க. அவங்க தப்பிச்சாங்களா இல்லையா அப்படிங்கறது தான் மீதி கதை.
படத்தோட பெரிய பலம் கதைக்களம். மெதுவா நகர்ந்தாலும் சஸ்பென்ஸை build பண்ணிட்டு போற விதம் நல்லா இருக்கு. திடீர் jump scare களை விட ஒரு அமைதியான பயம் படம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்கு. ஒச்சை கதாபாத்திரம் நல்ல depth உடன் எழுதப்பட்டிருக்கு. வடிவுக்கரசி திரையில் வந்தாலே ஒரு அசௌகரியமான பயம் வருது. அவங்க நடிப்பு தான் படத்தோட முதுகெலும்பு. மேக்கப் மற்றும் prosthetics work அவங்களை இன்னும் பயமுறுத்தும் உருவமா மாற்றுது.
Ananth Nag Dhileepan Singampuli மாதிரி நடிகர்கள் தங்களோட வேடங்களை நேர்த்தியா செய்திருக்காங்க. போலீஸ் விசாரணை பகுதிகளும் கதைக்கு தேவையான அளவுக்கு tension கொடுக்குது. உண்மையான பூர்விக வீட்டில் எடுத்திருக்கிறதால visuals ரொம்ப natural ஆவும் creepy ஆவும் இருக்கு. Lighting shadow எல்லாம் horror mood க்கு நல்ல support கொடுக்குது. Background score அமைதியாக இருந்தாலும் பதற்றத்தை அதிகப்படுத்துது.
ஆனா சில இடங்களில் படம் கொஞ்சம் slow ஆகுது. குறிப்பா ஒச்சை character மேல camera அதிக நேரம் linger ஆகுற மாதிரி feel தருது. சில night scenes ல natural lighting அதிகமா use பண்ணியதால characters சரியா தெரியாம போகுது. Editing இன்னும் crisp ஆ இருந்திருந்தா pace இன்னும் tight ஆ இருந்திருக்கும்.
மொத்தத்துல இந்த ‘கிரானி’ வடிவுக்கரசி நடிப்புக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். Horror ரசிகர்களுக்கு இது ஒரு decent மற்றும் satisfying watch. Climax மற்றும் ending ஒரு sequel hint கூட குடுக்குது.























