Categories
Reviews

‘லாக்டவுன்’ திரைப்பட விமர்சனம்

‘லாக்டவுன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast and Crew:

Cast: Cast:
Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayaga Raj, Vidhu, Sanjivie, Priya Ganesh, Asha

Crew Details:
Production House: Lyca Productions Pvt Ltd Producer: Subaskaran Head of Lyca Production: G.K.M. Tamil Kumaran Director: AR Jeeva Music: NR Raghunanthan & Siddharth Vipin Director of Photography: K.A. Sakthivel Editor: V.J. Sabu Joseph Art Director: A. Jayakumar Choreography: Sherif & Sri Girish Stunts: Om Sivaprakash Costume Designer: Meenakshi Shreedharan Costumes: M. Ramakrishnan
Makeup: P.S. Chandru SFX: Arun M Mix: T. Udaya Kumar DI: Pixel Light Studio Colourist: Ranga VFX: Lorven Studio Stills: Chandru Publicity Designs: Vijay VXM & Shyam V Trailer Editor – Kalaiarasan M PRO: Sathish Kumar Co-Directors: S. Sagayam & C. Subramaniyan Production Executive: Boopathi Production Manager: Pudukkottai M. Nagu Deputy Executive Producer:Chandrasekar V Executive Producers: Subramanian Narayanan & M.R. Ravi

‘லாக்டவுன்’ படம் கொரோனா காலத்தில் நாமெல்லாம் அனுபவித்த பயம், மன அழுத்தம், குழப்பம், தனிமை ஆகியவற்றை திரையில் காட்ட முயற்சி செய்து இருக்கிறார்கள். இது வழக்கமான திரில்லர் படம் போல் இல்லாமல் அதற்கு பதிலாக ஒரு சாதாரண மனிதனின் மனதுக்குள் அந்த கொரோனா காலத்தில் என்ன நடந்தது என்பதை அமைதியாக மெதுவாக திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கதையின் நாயகி கதாபாத்திரம் அனிதா (அனுபமா பரமேஸ்வரன்). நடுத்தர குடும்பத்தில் பிறந்த நாயகிக்கு. தந்தையாக சார்லியும் அம்மாவாக நிரோஷாவும் நடித்துள்ளனர். ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்து விட்டு வந்தது போல காட்சிகளோடு படம் தொடங்குகிறது. நைட் ஷிப்ட் வேலைக்கு வீட்டில் அனுமதி இல்லாததால் பகல் டியூட்டி வேலையைத் தேடிக் கொண்டே நாயகி தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தகவல் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் தோழி அழைக்கும் ஒரு இரவு பார்ட்டிக்கு போய் நண்பர்களின் வற்புறுத்தலால் மது அருந்தி, ஆட்டம் போட்டு போதையில் மயங்கி விழுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியாமல் சில நாட்களில் தன் கர்ப்பம் ஆனது தெரிய வருகிறது. யார் காரணம் என்ன நடந்தது வீட்டில் எப்படி சொல்வது கர்ப்பத்தை எப்படி கலைப்பது என எல்லாமே நாயகியின் மனதை நொறுக்குகிறது. இதற்கிடையில் லாக்டவுன் வந்ததால் டாக்டரையும் பார்க்க முடியாமல் எங்கும் போக முடியாமல் முழுமையாக சிக்கிக்கொள்கிறார்.

இந்த சூழ்நிலையில் நாயகி அனிதா அனுபவிக்கும் பயம் பதற்றம் தனிமை குற்ற உணர்ச்சி ஆகியவையே படத்தின் முக்கிய காட்சிகளாக காட்டுகிறார்கள். அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் எந்த கவர்ச்சியும் இல்லாமல் மிக இயல்பாக நடித்திருக்கிறார். பெரிய வசனங்கள் இல்லாமல் கண் பார்வை அமைதி சிறிய முகபாவனைகள் மூலமாகவே மன உளைச்சலை நமக்கும் உணர வைக்கிறார். அவரது நடிப்பு இந்த படத்தில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

சார்லி மற்றும் நிரோஷா நடுத்தர வர்க்க பெற்றோரின் பயம் கவலை பாசம் ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள். தோழியாக வரும் பிரியா வெங்கட் நாயகிக்கு நல்ல ஆதரவாக நடித்திருக்கிறார். லிவிங்ஸ்டன் இந்துமதி அபிராமி லொள்ளு சபா மாறன் உள்ளிட்டவர்கள் கதைக்கு தேவையான அளவில் மட்டும் வருகிறார்கள்.

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவு. வெறிச்சோடிய சாலைகள் மூடிய கதவுகள் மங்கலான நிறங்கள் எல்லாமே லாக்டவுன் காலத்தின் அடைப்பு உணர்வை நமக்கே கண்முன் கொண்டு வருகிறது. இசையும் பின்னணி ஒலியும் அதிக சத்தமில்லாமல் அமைதியாகவே பதற்றத்தை உருவாக்குகிறது.

படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. வேலை இழப்பு மருத்துவ சிக்கல்கள் சமூக அழுத்தம் மனநலம் பெண்களின் பாதுகாப்பு என பல விஷயங்களை ஒரே நேரத்தில் சொல்ல முயற்சி செய்வதால் எந்த ஒன்றும் ஆழமாக போகாமல் மேலோட்டமாக முடிந்துவிடுகிறது. சில காட்சிகளில் உணர்ச்சி உச்சத்திற்கு செல்ல வேண்டிய இடங்களில் அது சீக்கிரமே கடந்து போகிறது. அதேபோல் சில காட்சிகளில் அளவுக்கு மீறி தெரியாத விஷயத்தை பற்றி திரையில் portrait செய்கிறார்களோ என்றும் தோன்றுகிறது, அந்த காட்சிகளை பட்டும் படாமலும் காட்சிப்படுத்திருக்கலாம்.

மொத்தத்தில், இந்த ‘லாக்டவுன்’ பெண்களின் தனிமை பாதுகாப்பு சமூக அழுத்தம் பற்றி சிந்திக்க வைக்கும் படம். குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும்,விழிப்புணர்வாக தர முயற்சித்த அதே வேளையில் எல்லாவற்றையும் பாதுகாப்பாக ‘கையாளுங்கள்’ என்று படம் உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *