full screen background image
Search
Thursday 22 January 2026
  • :
  • :
Latest Update

‘ஹாட் ஸ்பாட்-2 மச்’ திரைப்பட விமர்சனம்

‘ஹாட் ஸ்பாட்-2 மச்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew

Cast:
Priya Bhavani Shankar (Shilpa)
Brigida (Madhumitha)
Ashwin (Yugan)
Rakshan (James)
Adithiya Baskar (Sathya)
Vignesh Karthick (Mohammed Sheriff)
KJ Balamani Marbhan
Bhavani Sre (Nithya)
Sanjana Tiwari (Sharnitha)
Thambi Ramaiah (Baskar)

Crew:
Producer: KJ Balamani Marbhan, Aneel K Reddy
Director: Vignesh Karthick
DOP: Jagadeesh Ravi, Joseph Paul
Music: Sathish Raghunathan
Editor: U Muthayan
Art Director: C Shanmugam
PRO: Velu

முதல் பாகம் மாதிரியே இந்த படமும் “ஒரு இயக்கத் தயாராக இருப்பவர், தயாரிப்பாளரிடம் கதை சொல்றார்” என்ற ஃபார்மாட்டில்தான் போகுது. ஆனா இந்த தடவை பேசப்படுற விஷயங்கள் இன்னும் கொஞ்சம் தீவிரம். சமூகத்தில் பேசத் தயங்குற விஷயங்கள், ரசிக வெறி, பெண்ணின் சுதந்திரம், நாகரிகம் – மரியாதை, தலைமுறை இடைவெளி, காதல், டைம் டிராவல் வரை எல்லாத்தையும் காமெடி + சீரியஸ்னு கலந்து சொல்ற முயற்சி.

விஜய்–அஜித் ரசிக வெறியை மையமாக்கிய கதையில, அந்த வெறி எந்த அளவுக்கு போகுது, அது வாழ்க்கையை எப்படிச் சீரழிக்குது என்பதை எம்.எஸ். பாஸ்கர் மிரட்டலான நடிப்புல அழுத்தமா காட்டுறாங்க. ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் மாதிரியான இளைஞர்கள் “பட்டும் திருந்தாத ரசிகர்கள்” மாதிரி நடித்திருப்பது கவனிக்க வைக்குது.

‘என் உடை, என் சுதந்திரம்’ன்னு பேசுற பெமினிச் சிந்தனை, கல்யாணத்துக்கு முன்னாடி ஆண்–பெண் எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களை சஞ்சனா திவாரி – தம்பி ராமையா அத்தியாயம் வழியா தெளிவா சொல்றாங்க. அந்த அப்பா–மகள் உறவுல இருக்குற சங்கடம், சமூக அழுத்தம் எல்லாம் ஓரளவுக்கு வேலை செய்கிறது.

2050-ல இருக்குற பெண், 2025-ல இருக்குற இளைஞன் – போன்ல பேசுற காதல், டைம் டிராவல், எதிர்பாராத திருப்பம் எல்லாம் சுவாரஸ்யமா இருக்கு. அஸ்வின் குமார், பவானி ஸ்ரீ இந்த பகுதியில் கொஞ்சம் ஃப்ரெஷ் ஃபீல் தர்றாங்க. லாஜிக் எல்லாம் எல்லா இடத்திலும் ஒட்டாவிட்டாலும், ஐடியா லெவல்ல இது வித்தியாசம்.

பிரியா பவானி சங்கர் படத்தோட முதுகெலும்பு மாதிரி. ஒரு சேரில உட்கார்ந்தபடியே, கண்களாலேயே கதை சொல்லி ரசிக்க வைக்குறார். அவருக்கு எதிர்ல தயாரிப்பாளராக வரும் பாலமணிமார்பனின் ரியாக்ஷன்கள் காமெடி பிளஸ். பிரிகிடா சகா கொஞ்சம் விவகாரமான வேடத்தில் வந்து கவனம் ஈர்க்குறார்.

சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசை ஒவ்வொரு கதையோட கிளைமாக்ஸிலும் நல்ல புஷ் தருது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படம் இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே முடிஞ்சு போக உதவியிருக்கு.

முதல் பாகத்தோட ஒப்பிட்டா, இந்த பாகம் அந்த அளவுக்கு தாக்கம் தரலன்னு தோணலாம். ஆனா இதை தனியா ஒரு படமா பார்த்தா, சமூக கருத்துகளை ஓரளவு அழுத்தமா சொல்லி, காமெடியையும் கலந்து கொடுத்திருக்காங்கன்னு சொல்லலாம்.

மொத்தத்தில், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ முதல் பாகத்தோட அடிப்படையை வைத்துக்கிட்டு, இன்னும் கொஞ்சம் தைரியமா பேசுற படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *