ஜீ தமிழின் அதிரடி சாகசப் போட்டி ‘மிஸ்டர் & மிஸஸ் கில்லாடிஸ்’ புதிய பரிமாணத்தில் மீண்டும் வருகை – ஜனவரி 25 முதல், ஒவ்வொரு ஞாயிறும் இரவு 8:30 மணிக்கு!

தமிழ் தொலைக்காட்சித் திரையில் என்றும் புதுமையான மற்றும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜீ தமிழ், தனது ஐகானிக் ரியாலிட்டி ஷோவான ‘மிஸ்டர் & மிஸஸ் கில்லாடிஸ்’ நிகழ்ச்சியை புதிய பொலிவுடன் “கில்லாடி ஜோடிஸ்”என்ற பெயரில் மீண்டும் கொண்டு வருகிறது.
முன்பை விட பிரம்மாண்டமாகவும், சாகசங்கள் நிறைந்த புதிய பரிமாணத்திலும் களமிறங்கும் இந்த நிகழ்ச்சி, வரும் ஜனவரி 25, 2026 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
‘கில்லாடி ஜோடிகள்’ என்பது அதிரடி சாகசங்கள் நிறைந்த ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். இதில் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் சமூக வலைதளங்களைச் சேர்ந்த ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களின் வலிமை, மன உறுதி மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் ஒத்துழைப்பைச் சோதிக்கும் வகையில் சவால்கள் காத்திருக்கின்றன. காடு, நீர், நெருப்பு மற்றும் மலை என நான்கு கடினமான நிலப்பரப்புகளில் (Terrains) அமைக்கப்பட்டுள்ள சவால்களைத் தம்பதிகள் எதிர்கொள்ளும்போது, அவர்களின் அன்பும் துணிச்சலும் ஒருங்கே வெளிப்படும்.
இந்த சீசனின் மற்றொரு மிகப்பெரிய சிறப்பு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரைக்குத் திரும்பும் முன்னணித் தொகுப்பாளர் சஞ்சீவ் வெங்கட்டின் வருகை! அவரது வசீகரமான தொகுப்பு முறையும், ரசிகர்களுடனான நெருக்கமான உறவும் இந்த நிகழ்ச்சிக்குக் கூடுதல் பலத்தை சேர்க்கின்றன.
போட்டி, வேகம் எனத் தாண்டி, இந்த நிகழ்ச்சி ஜோடிகளுக்கு இடையிலான ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும். சவால்களைத் தாண்டி போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பயணங்கள், அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மதிப்பீடுகள் போன்ற மனதைத் தொடும் தருணங்களையும் இந்த நிகழ்ச்சி நேயர்களுக்குக் காட்டும்.
சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீசன், இலங்கை, வியட்நாம், தாய்லாந்து மற்றும் மாலத்தீவுகள் போன்ற கண்கவர் வெளிநாட்டுத் தளங்களில் படமாக்கப்பட உள்ளது. இது நேயர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நெருப்பு, நீர், பயம் என அனைத்தையும் கடந்து, அன்பின் வலிமையை நிரூபிக்க வரும் “கில்லாடி ஜோடிஸ்” நிகழ்ச்சியை காணத் தயாராகுங்கள். கில்லாடி ஜோடிகள்’ – வரும் ஜனவரி 25 முதல், ஞாயிறு இரவு 8:30 மணிக்கு உங்கள் ஜீ தமிழில்.











