full screen background image
Search
Friday 24 July 2026
  • :
  • :
Latest Update

‘வா வாத்தியார்’ திரைப்பட விமர்சனம்

‘வா வாத்தியார்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Director: Nalan Kumarasamy

Cast: Karthi, Krithi Shetty, Sathyaraj, Rajkiran

Runtime: 129 minutes

எம்.ஜி.ஆர் என்ற பெயரே தமிழர்களுக்கு ஒரு உணர்வு. அந்த ஆளுமையை மையமாக வைத்து, “எம்.ஜி.ஆர் ஆன்மா ஒரு கெட்ட போலீஸ் உடம்புக்குள் போனால் என்ன ஆகும்?” என்ற வித்தியாசமான ஐடியாவோட தான் ‘வா வாத்தியார்’ ஆரம்பிக்கிறது. நலன் குமரசாமி மாதிரி ஒரு இயக்குநர், கார்த்தி மாதிரி ஒரு நடிகர் சேர்ந்ததால் எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது. ஆனா படம் முழுக்க அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றல.

கார்த்தி, ராமு என்ற லஞ்சம் வாங்கும், சூதாடும் கெட்ட போலீஸாக வருகிறார். எம்.ஜி.ஆர் ரசிகரான தாத்தா (ராஜ்கிரண்) வளர்ப்பில் வந்தாலும், வாழ்க்கை சுகத்துக்காக “எம்.ஜி.ஆர் மாதிரி நல்லவனா இருந்தா வாழ முடியாது, நம்பியார் மாதிரி இருந்தா தான் பணம் வரும்”ன்னு நினைக்கிற கேரக்டர். இந்த புள்ளி நல்லா இருக்கு. எம்.ஜி.ஆர் ஆன்மா அவனுக்குள் புகுந்து ‘ராமசந்திரன்’ ஆக மாறும் போது, நல்லது கெட்டதை அழிக்கும்னு ஒரு அழகான கருத்தும் இருக்கு.

முதல் பாதி ஓரளவு சுவாரசியமா போகுது. கார்த்தியின் நக்கல் பேச்சு, காமெடி பாடி லாங்குவேஜ் சில இடங்களில் ரசிக்க வைக்குது. இடைவேளைக்கு முன்னாடி வரும் திருப்பம், “சரி, இப்போ படம் தூக்கும்”ன்னு நம்ப வைக்குது.

ஆனா இரண்டாம் பாதியில தான் படம் தடுமாறுது. எம்.ஜி.ஆர் கெட் அப், குதிரை, சாட்டை, சண்டை எல்லாம் பார்க்க நல்லா இருந்தாலும், கதையோட சரியா ஒட்டல. “எம்.ஜி.ஆர் மாதிரி உடை போட்டா போதுமா?”ன்னு கேள்வி வருது. அவருடைய வள்ளல் தன்மை, மக்கள் மீது இருந்த காதல், அரசியல் பார்வை – இவை எல்லாம் இன்னும் ஆழமா சொல்லியிருக்கலாம். பெரும்பாலும் சண்டை போட்டுட்டு போற மாதிரியே எம்.ஜி.ஆர் கேரக்டர் நின்றுடுது.

கிர்த்தி ஷெட்டி வரும் கேரக்டர் புதுசா இருக்க வேண்டியது. ஆனா அது பாதியிலேயே கைவிடப்பட்ட மாதிரி. அவர் ஏன் அப்படியிருக்கிறார், அந்த ஆந்தை என்ன, எதுவுமே சரியா விளக்கப்படல. அவருக்கும் கார்த்திக்கும் நடுவில வர்ற காதலும் பெருசா வேலை செய்யல.

வில்லனாக சத்யராஜ் இருக்கிறார். ஆனா அவர் கேரக்டர் வலுவா எழுதப்படல. அரசியல்வாதி, கார்ப்பரேட், ஹேக்கர்கள், ‘மஞ்சள் முகம்’ டீம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறிப்பு – எல்லாம் இருக்கு. ஆனா எல்லாம் தனித்தனியா இருக்கு, ஒன்றா சேர்ந்து ஒரு பெரிய தாக்கம் கொடுக்கல.

ராஜ்கிரண் மட்டும் படத்துக்கு பெரிய பிளஸ். எம்.ஜி.ஆர் பற்றி அவர் பேசும் காட்சிகள் மனசை தொடுது. சந்தோஷ் நாராயணனின் இசையும், பழைய எம்.ஜி.ஆர் பாடல்களும் ரசிகர்களை சின்ன சின்ன நொஸ்டால்ஜியாவுக்கு கூட்டிட்டு போகுது. ஒளிப்பதிவு ஓகே தான், ஆனா படம் முழுக்க டார்க் ஷேடு கொஞ்சம் அலுப்பை தருது.

மொத்தத்தில்,‘வா வாத்தியார்’ – நல்ல ஐடியா, பெரிய எதிர்பார்ப்பு… ஆனா திரையில் சரியா செட்டாகாத படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *