‘அங்கம்மாள்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Geetha Kailasam, Bharani, Saran Shakthi, Mullaiyarasi, Thendral Raghunathan
Directed By : Vipin Radhakrishnan
Music By : Mohammed Maqbool Mansoor
Produced By : Stone Bench Films, NJoy Films, Firo Movie Station – Kaarthekeyen.S, Firoz Rahim, Anjoy Samuel
இந்த படம் முழுக்க ஒரு சின்ன விஷயம் பெரிய பிரச்சனையாக மாறும் விதத்தை எளிமையாகவும் நெருக்கமாகவும் காட்டுகிறது. ஜாக்கெட் அணியாமல் வாழ்ந்து வருகிற அங்கம்மாளை, வெளியுலக மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக மாற்ற முயற்சிப்பதே படத்தின் மையக்கரு. இளைய மகன் சரண், மருத்துவராக படித்து வந்து தனது காதலியை வீட்டிற்கு அறிமுகப்படுத்தும் முன், “அம்மா கொஞ்சம் நாகரீகமாகத் தோன்றணும்” என்ற எண்ணத்தில் ஜாக்கெட் அணியச் சொல்வது தான் இந்த பிரச்சனையின் தொடக்கம்.
ஆனா அங்கம்மாள் அதுக்கெல்லாம் சரணடிக்கிற மாதிரி பெண்ணே இல்லை. தன் வாழும் முறையிலேயே அவள் சுதந்திரம், கம்பீரம், ஆளுமை எல்லாம் இருக்கிறது. மற்றவர்களுடைய பார்வைக்காக தான் மாற வேண்டுமா என்ற கேள்வியை அவள் செயலில் காட்டுகிறாள். இதுதான் இந்த படத்துக்கே ஒரு வலிமை.
இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் கதையை எளிமையாக வைத்திருந்தாலும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் நிஜமாக உணரும்படி உருவாக்கியிருக்கிறார். அங்கம்மாள், அவள் இரு மகன்கள், மருமகள் என எல்லாருமே நம்ம தெருவிலேயே வாழ்கிறவர்களைப் போலவே தோன்றுகிறார்கள்.
கீதா கைலாசம் இந்த படத்துக்கே முதுகெலும்பு. அங்கம்மாளின் பிடிவாதம், தனிமை, கோபம், கம்பீரம், சின்ன சின்ன சிணுங்கல்கள் எல்லாம் அவளுடைய உடல் மொழியிலேயே வெளிப்படுகிறது. இது லவுட் ஆக நடிக்க வேண்டிய ரோல் இல்லை; மெதுவான, ஆனால் தாக்கம் உள்ள நடிப்பு — அதைக் கீதா கைலாசம் சரியாகப் பிடித்திருக்கிறார்.
மக்களால் அல்ல, மகன் சரணின் inferiority தான் இந்த பிரச்சனையின் ஒரிஜினல் காரணம். “மற்றவர்கள் என்ன நினைப்பாங்க?” என்ற பயம் தான் அவனைக் கட்டிப்பிடிச்சிருக்கிறது. அந்த உள் குழப்பத்தையும் படம் நன்றாகத் தொட்டுச் செல்கிறது.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங்—all are neat. பரந்த நிலப்பரப்புகள், காற்றடிக்கும் சூழல், கிராம வாழ்க்கை எல்லாம் படம் முழுக்க தனியே பேசும் மாதிரி காட்டப்பட்டிருக்கிறது.
படத்தின் நீளம் கொஞ்சம் குறைந்திருந்தா இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும். சில காட்சிகள் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் உருட்டுவது போல தோன்றும். ஆனாலும், முடிவில் படம் யாரையும் தீவிரமாக ஆதரிக்காமலும் குற்றம் சாட்டாமலும், அந்த குடும்பத்தையும் அங்கம்மாளையும் நிஜமான மனிதர்களாகவே காட்டிச் செல்கிறது.
மொத்தத்தில், ‘அங்கம்மாள்’– ஒரு பெண்ணின் சுய மரியாதையை மையமாகக் கொண்ட சுத்தமான கதைக்களம்

























