full screen background image
Search
Tuesday 25 August 2026
  • :
  • :
Latest Update

மற்றொரு வெற்றியை பதிவு செய்த அர்ஜுன் தாஸ்

இந்த வருடம் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. Good Bad Ugly திரைப்படம் வெற்றிகரமாக ஓடிய நிலையில், தற்போது வெளியான “பாம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கிராமத்து பின்னணியில் உருவான இந்த படத்தில், தனது இயல்பான குணச்சித்திர நடிப்பால் அர்ஜுன் தாஸ் பொதுமக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். ஒரு கிராமத்தில் இரண்டு சமூகத்தினருக்கிடையில் நடக்கும் மோதல்கள், பின்னர் எவ்வாறு ஒற்றுமையாக மாறுகிறார்கள் என்பதே இப்படத்தின் மையக் கரு.

திரைப்படத்தில் காளி வெங்கட் இறந்த பின், இரண்டு சமூகத்தினரும் நடத்தும் அலப்பறைகளை நகைச்சுவை கலந்த சமூக விழிப்புணர்வாக இப்படத்தை இயக்குநர் இயக்கியுள்ளார். படத்தில் நடித்த அனைவரும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, காளி வெங்கட் இறந்த பின்பு அவரது உடலில் இருந்து வெளிவரும் வாயுவை சத்தம் இக்காட்சிகளில், அர்ஜுன் தாஸும் கிராம மக்களும் செய்யும் காமெடிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரம் தனது கைகளை கீழே வைத்தபடியே ஓடுவதும் நடப்பதும் போல் இருப்பார்,அதுபோல இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸும் சில காட்சிகளில் அப்படியே நடித்துள்ளார்; மேலும், படத்தில் ஹீரோயின் உட்பட சில முக்கிய கதாபாத்திரங்கள் அர்ஜுன் தாஸின் கன்னத்தில் அறையும் காட்சிகளில் யாரோ அரைந்ததில் கைவிரல்கள் பதிந்திருக்கும்.

படத்தின் கிளைமாக்ஸில், தனது தனிப்பட்ட பேஸ் மண்ட் குரலில் இரண்டு சமூகங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதோடு, குங்குமத்தை முகத்தில் பூசிக்கொண்டு “சாமி இறங்கி அருள்வாக்கு சொல்கிறேன்” என்று நடிக்கும் தருணங்களில் அவரது நடிப்பு நரம்பு புடைக்கச் செய்கிறது. அதிலும் தனது டிரேட்மார்க் “லைஃப் ஸ்டைல் செட்டில்மெண்ட்” வசனம் ரசிகர்களை கைதட்ட வைத்துள்ளது.

மொத்தத்தில், பாம் திரைப்படம் அர்ஜுன் தாஸின் கேரியரில் ஒரு முக்கிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படக்குழுவினருக்கும், நடிகர் அர்ஜுன் தாஸுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉🎊




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *