full screen background image
Search
Monday 27 July 2026
  • :
  • :
Latest Update

‘Good Bad Ugly’ திரைப்பட விமர்சனம்

‘Good Bad Ugly’ திரைப்பட ரேட்டிங்:3.5/5

Casting : Ajith Kumar, Trisha, Arjun Dass, Sunil, Prabhu, Prasanna, Simran, Priya Varrier, Shine Tom Chacko, Yogi Babu, Redin Kingsly, Karthikeyan, Harry Jose

Directed By : Adhik Ravichandran

Music By : GV Prakash Kumar

Produced By : Mythri Movie Makers – Naveen Yerneni and Y. Ravi Shankar

’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.Good Bad Ugly பக்கா கமர்ஷியல் என்டர்டையின்மென்ட்💥

முற்றுமுழுதான கமர்ஷியல் மசாலா சினிமா என்பதால் லாஜிக் என்றை ஒன்றை தூக்கி வைத்துவிட்டு படம் பற்றி பேசலாம். Red Dragon என்ற ஒருத்தன் மாபெரும் கேங்ஸ்டார் என்ற விம்பத்தை பார்வையாளர்களிடத்தில் கட்டியெழுப்பிவிட்டால் அந்த கேங்ஸ்டார் பற்றிய காட்சியமைப்புகள் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அமைக்க வேண்டும். இந்த விடயத்தில் ஆதிக் படுநேர்த்தியாக தொழிற்பட்டிருக்கின்றார். அஜீத்தின் மேனரிசத்தையும் ஜீவியின் பிண்ணணி இசையையும் ஒன்று திரட்டி Red Dragon என்ற Gang star ஐ அத்தனை மாஸாக காட்சிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் அவ்வளவு ஜாலியாக அஜீத் தனது கேரக்டரை வெளிப்படுத்தியிருப்பதே படத்திற்கு பாதிபலம். பிண்ணணி இசையெல்லாம் ஜி.வி பின்னியெடுத்திருக்கின்றார். படம் ஆரம்பித்து நேரம் போவதே தெரியவில்லை. ரசிகர்கள் விசிலடித்து கொண்டாட படம் முழுவதும் அத்தனை மாஸ் காட்சியமைப்புகள்.

ஆனால் அத்தனை சினிமாப்பாடல்களை படத்தில் பயன்படுத்தியமை தான் என்னைப்பொறுத்த வரை பெரிய மைனஸாக தெரிந்தது. ஆனால் புலி புலி பாடலின் Placement வேற லெவல். அந்த பாடலுக்கு தியேட்டர் அதிருகின்றது.

ஆகமொத்தம் எல்லாவற்றையும் மறந்து விசிலடித்து கொண்டாட ஒரு மசாலா சினிமா கிட்டியுள்ளது. கொண்டாடலாம் 😍💥

ஆதிக் செய்கை ………. தரமான செய்கை 🔥🔥




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *