Categories
Uncategorized

வீர தீர சூரன்

சீனுக்கு சீனு பொறிஞ்சி பொறிஞ்சி வெடியுது

என்ன மாதிரி கதைகளம் டா எப்பா இது , மியூசிக் நம்ம G.v.P மிரட்டி விட்டுடாப்ல

வெறும் இரவு காட்சிகளாகவே நமக்கு திரை நகர்வு இருக்கு ஆனா இரவு என்பத மறந்து கதைக்குள்ளயே நம்ம கூப்டு நங்கூரமாக அமர வைத்துவிட்டார் இயக்குநர்

எதிர்ல இருக்கவன் எமனா இருந்தாலும் அந்த எமனுக்கே என்ட் கார்டு போடுற மாதிரி இருக்கு கதாநாயகனின் கதாபாத்திரம் 🔥

சொன்னா நம்ப மாட்டீங்க போலிஸ் ஸ்டேசன் சீன் ஒன்னு வரும் அந்த ஒரு சீன் மொத்த தியேட்டரயும் தூக்கி சொருவிட்டாரு சியான்

கதாநாயகி அதான்ங்க நம்ம விக்ரம் பொண்டாட்டி இருக்கே என்ன ஆக்டிவ் ஆக்டிங் டா கடவுளே , ராயன் லா நடித்த அதே வெறியோட இந்த படத்துலயும் நடிச்சிருக்கும் போல மிரட்டி விட்ருச்சி

காதல் , கல்யாணம் , அடிதடி , வெட்டுகுத்து னு எல்லா சேர்ந்த கலவையா படம் வந்து இருக்கு

கொஞ்சம் நாளுக்கு முன்ன கேரளாபடம் பணி என்று ஒரு படம் வந்துச்சி அதுக்கு பயர் விட்ட நம்ம இந்த மாதிரி படத்தை பாத்தா எக்ஸ்ட்ரா 4,5 பயர் அள்ளி விடுவாங்க

அந்த SJ Surya வ யாராச்சும் தடுத்து நிறுத்துகப்பா மனுசன் பிண்ணி பெடல எடுத்துட்டான் டிவிஸ்டு மேல டிவிஸ்ட் வச்சி தலைவன் அதகளம் பண்ணுவான் , ஒரு டயலாக் சொர்வாரு , நம்பிக்கை க்கு , அத தியேட்டர் ல பாத்தா தான் புரியும் அப்படி ஒரு டெலிவரி அது 🔥

கண்ணன் னு ஒரு கேரக்டரு அந்த கேரக்டர இத்தன நாளா எங்கடா ஒளிச்சி வச்சிருந்தீங்க நிறைய படம் நடிக்கல போல அவரு, அவரெல்லாம் தமிழ் சினமால தொடர்ந்து நடிச்சா வேற மாதிரி இருக்கும் வில்லனுக்கு எல்லாம் வில்லனா இருக்கான் டா எப்பா

சியான் க்ளைமேக்ஸ்ல ஒன்னு சொல்வாப்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு எல்லாம் போய்டுங்கனு அத நேரத்தில் தியேட்டர்ல விசில் சத்தம் விண்ண பிளந்துச்சி

ஒட்டுமொத்தமா தமிழ் சினிமா இந்த மாதிரி படத்த தான் இத்தன மாசமா தேடிட்டு இருந்துச்சி , சியானுக்கு சரியான படம் இது

படம் வேற மாதிரி டைம் கிடைச்சா தியேட்டர் பக்கம் போய் வாங்க… ஒரு 3 மணி நேரம் மிரட்டலா இருக்கும் 💯🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *