full screen background image
Search
Wednesday 30 April 2025
  • :
  • :
Latest Update

‘வீர தீர சூரன்- பாகம் 2’ திரைப்பட விமர்சனம்

‘வீர தீர சூரன்- பாகம் 2’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போடத் துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா). அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை எத்தகையது, அருணகிரி எதற்காகப் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடிகளே மிரளும் காளியின் பிளாஷ்பேக் என்ன, அவர் இந்தச் சிக்கலுக்கு எழுதும் முடிவுரை என்ன என்பதே இந்த ‘வீர தீர சூரன் பாகம் 2’.

பெரியவர் என்கிற ரவியின்(பிருத்விராஜ்) வீட்டிற்கு ஒரு பெண் வருகிறார். கிரிமினல்களுடன் தொடர்பு உடைய பெரிய கை தான் அந்த பெரியவர் ரவி. இந்நிலையில் தன் மனைவி மற்றும் மகளை காணவில்லை என அந்த பெண்ணின் கணவர் எஸ்.பி. அருணகிரியிடம்(எஸ்.ஜே.சூர்யா) புகார் அளிக்கிறார்.பெரியவர் மற்றும் அவரின் மகன் கண்ணன்(சூரஜ் வெஞ்சாரமூடு) ஆகியோரை தாக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த அருணகிரிக்கு தானாக ஒரு வாய்ப்பு வந்துவிட்டது.

பெரியவரை என்கவுன்ட்டரில் கொல்ல முடிவு செய்கிறார் அருணகிரி. இது குறித்து அறிந்த பெரியவரோ தன் விஸ்வாசி காளியை அணுகுகிறார். கேங்ஸ்டர் வேலையை விட்டுவிட்டு தன் மனைவி கலை(துஷாரா விஜயன்), 2 பிள்ளைகளுடன் நிம்மதியாக வசித்து வரும் நேரத்தில் இப்படியொரு பிரச்சனை வருகிறது.

மூன்று பேர் காளியை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்த அவரின் குடும்பத்தை வைத்து மிரட்டுகிறார்கள். காளி என்ன செய்யப் போகிறார் என்கிற பதட்டம் நம்மை தொத்திக் கொள்கிறது. கதை நகர நகர ஆர்வமும் அதிகரிக்கிறது. கண்ணிவெடி காட்சி வரும் போது இருக்கையின் நுனிக்கே வர வைத்துவிடுகிறார் இயக்குநர் அருண்குமார். காளியும், அருணகிரியும் சந்திக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

ஒரு நாள் இரவில் நடப்பதை மட்டும் காட்டியிருந்தால் படம் வித்தியாசமாக இருந்திருக்கும். பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு பலகீனமாக அமைந்துவிட்டது.கிளைமாக்ஸ் காட்சி எதிர்பார்த்த அளவுக்கு உற்சாகத்தை அளிக்கவில்லை. அதனாலோ என்னவோ விக்ரம் பாட்டை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் அருண் குமார்.

காளியாகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம். தூள், சாமி விக்ரமை பார்த்த திருப்தி இருக்கிறது. துஷாரா விஜயன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார். விக்ரம், துஷாரா இடையேயான வயது வித்தியாசமே திரையில் தெரியவில்லை. அந்த அளவுக்கு இருந்தது அவர்களின் நடிப்பு. எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போன்று வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சூரஜ் வெஞ்சாரமூடுவின் நடிப்பு அருமை.

கதைக்குள் களமாடும் நடிப்பு அசுரன் விக்ரம் அவருடன் போட்டிபோடும் துஷாரா விஜயன் தாமதமானாலும் தரமான படம் இந்த ‘வீரதீர சூரன்’.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *