’ட்ராமா’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Vivek Prasanna, Chandini, Sanjeev, Ananth Nag, Poornima Ravi, Prathosh, Marimuthu, Rama, Pradeep K Vijayan, Eswar, Nizhalgal Ravi, Vaiyapuri
Directed By : Thambidurai Mariyappan
Music By : RS Rajprathap
Produced By : Turm Production House – S Uma Maheshwari
விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதிக்கு பல வருடங்களாகக் குழந்தை இல்லை.அதற்காக மருத்துவம் பார்க்கிறார்கள்.சாந்தினி கர்ப்பமாகிறார்.அதன்பின் அவருக்கு ஓர் அதிர்ச்சி.அது என்ன?
தானி ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி, தனது காதலனால் பேரரதிர்ச்சிக்கு ஆளாகிறார்.அது என்ன?
மருத்துவர் போர்வையில் விபரீத வேலையில் ஈடுபடுகிறார் ஒருவர்.அது எதனால்?
இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்ப்பதுதான் ட்ராமா.
விவேக் பிரசன்னாவுக்கு அழுத்தமான வேடம்.யாரும் ஏற்கத் தயங்கும் வேடத்தை ஏற்று தன் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் குறையையே நிறையாக்கிவிடுகிறார்.
துக்கம்,மகிழ்ச்சி உடனே அதிர்ச்சி என மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய வேடம் சாந்தினிக்கு.அவர் நன்றாகவும் இருக்கிறார் நன்றாக நடித்துமிருக்கிறார்.
இளம்நாயகி பூர்ணிமா ரவிக்கு காதல் காட்சிகளிலும் அதன்பின்னான அதிரடிக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நல்ல காதலனாகவும் எதிர்மறை நாயகனாகவும் இருவேறுபட்ட வேடங்களையும் செய்திருக்கும் பிரதோஷ்,அதற்கேற்ற நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார்.
மருத்துவர் என்கிற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடும் பிரதீப் கே விஜயன், காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சீவ், அம்மா கதாபாத்திரத்தில் வரும் ரமா,மாரிமுத்து, நிழல்கள் ரவி,ஆனந்த் நாக் ஆகிய அனைவரும் அளவாக நடித்துள்ளனர்.
அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் படத்தின் தன்மை உயர்வாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்பின இசையில் பாடல்கள் கேட்கலாம்.திகில் காட்சிகளில் பயத்தையும் காதல் காட்சிகளில் ரசனையையும் கொடுத்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் முகன்வேல்,பல கிளைகளை ஒன்றாக இணைப்பதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
குழந்தையின்மைச் சிக்கலை வைத்து நடக்கும் நிகழ்வுகள் மற்றும் மருத்துவத்துறை குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் மையக்கதை இருந்தாலும் அனைவரும் ஆர்வமுடன் பார்க்கும்படியான திரைக்கதை அமைத்து அதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.
மொத்தத்தில் இந்த ‘ட்ராமா’ புதுமண தம்பதியர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படம்