full screen background image
Search
Thursday 18 June 2026
  • :
  • :
Latest Update

‘ராஜா கிளி’ திரைப்பட விமர்சனம்

‘ராஜா கிளி’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Thambi Ramaiya, Samuthirakani, Deepa, Praveen Kumar G, Daniel Annie Pope, Pazha Karupaiya, Vetrikumaran, Arul Doss, Suveta Shrimpton, Reshma Pasupaleti, Subha , VJ Andrews, Malik , King Kong

Directed By : Umapathy Ramaiah

Music By : Thambi Ramaiah and Sai Dinesh

Produced By : V House Productions – Suresh Kamatchi.

மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா களம் இறங்கி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார்.

பெரும் செல்வந்தரான தம்பி ராமையா ,பெண்களிடம் அதிக ஈடுபாடு கொண்டவர் ,இரண்டு திருமணம் செய்து கொண்ட பிறகும் மூன்றாவதாக ஒரு பெண் மீது நாட்டம் கொள்கிறார், அதன்பின் அவரது வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் ஏற்படுகிறது. அந்த மாற்றங்களுக்கு பின்னால் அவரது வாழ்க்கை தடம் எப்படி மாறிப்போனது என்பதே ராஜா கிளி படத்தின் மீதி கதை.

ராஜா கிளி படத்தின் கதையின் நாயகனாக தம்பி ராமையா நடித்துள்ளார் .இந்தப் படத்தில் அவர் செல்வந்தராகவும் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இரண்டு பரிமாணங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து நடித்துள்ளார் .படத்திற்கு அவர் இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் படத்தில் குறைவான காட்சிகளிலே நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை சமுத்திரகனி வழங்கி இருக்கிறார் ,மேலும் தம்பிராமையாவின் மனைவியாக நடித்திருக்க கூடிய தீபா, சுபா ,ஸ்வேதா பழ. கருப்பையா ,வெற்றி குமரன் ,அருள்தாஸ் போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்துள்ளதோடு படத்தின் கதை வசனம் பாடல்கள் இசை என பல பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார் .இந்தப் படத்தின் மூலமாக தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி ராமையா இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.சாய் தினேஷின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்ற .நிகழ்வுகளை சித்தரிக்கும் கதைக்கு பொருத்தமான நடிகர்களை கொண்டு படத்தினை இயக்கியுள்ளார் உமாபதி.

மொத்தத்தில், இந்த ‘ராஜா கிளி’ ஆதிகாலம் தொட்டு இன்று வரை பெண்களிடம் அதிகம் சலாபமாக இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற திறந்த புத்தகமாக வந்திருக்கும் திரைப்படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *