*விஷ்ணு விஷால் வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விழா !!*
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது.
இந்நிகழ்வினில்
*Seven Warriors சார்பில் சுரேஷ் குமார் பேசியதாவது…*
மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம் உருவாகக் காரணம். விஷ்ணு விஷால் ஸ்டூடியோவிற்கு நன்றி. வி என்றாலே வெற்றி தான் விக்னேஷ் கார்க்திக் உடன் இப்போது விஷ்ணு விஷாலும் எங்களுடன் இணைந்துள்ளார். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
*KJB டாக்கீஸ் சார்பில் பாலமணிமார்பன் பேசியதாவது..*
ஹாட் ஸ்பாட் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம், இப்போது இரண்டாம் பாக அறிவிப்பை விழாவாகக் கொண்டாடுகிறோம். முதல் பாகத்தை இவ்வளவு விமரிசையாக வெளியிடவில்லை. இப்படத்தின் வெற்றிக்கு நீங்கள் தந்த ஆதரவே காரணம் நீங்கள் தான் இப்படத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் செய்து தந்தீர்கள்.
ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றி விழாவில் நண்பர் சுரேஷ் குமார் இரண்டாம் பாகத்தை அறிவித்து விட்டார். இயக்குநரிடம் பேசும்போது உடனே ஆரம்பிக்கலாம் என்றார். துரை அவர்கள் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர் தான் விஷ்ணு விஷால் சார் படத்தை வழங்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
*இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…*
ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி, நீங்கள் தந்த ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால் சார் வழங்குவது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க நிறையத் தைரியம் வேண்டும். அவர் மிகப்பெரிய மனதுடன் எங்களை ஊக்குவிக்கிறார். இந்த புரோமோ ஷீட்டில் கூட மிக எளிமையாக இருந்தார். ஹாட் ஸ்பாட் 2 முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் உங்களை மகிழ்விக்கும்,
இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம். உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
*நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது*
ஹாட் ஸ்பாட் 2 நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு முன்னாடி பேசியவர்கள் கூறுகிறார்கள்… ஆனால் அப்படியில்லை, நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது வந்தே தீரும். நல்ல படைப்புகள் கண்டிப்பாக வெற்றி பெறும். ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம், கலைக்கு போன் செய்து திட்டினேன். சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான், அதனால் எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன், ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன் ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது. அப்போதே விக்னேஷை அழைத்து பாராட்டினேன். இரண்டாம் பாகத்தின் கதையை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. எனக்குக் கடைசி கதை ரொம்ப பிடித்துள்ளது. பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும். இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன். அதன் முதல் படி ஹாட் ஸ்பாட் 2. இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம். விஷ்ணு விஷால் ஸ்டூடியோ மூலம் நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்.
விஷ்ணு விஷால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் K V துரையின்
D Company நிறுவனம் உடன் இணைந்து பல படங்கள் தயாரித்து வழங்கவுள்ளேன்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்… உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இப்படத்தினை Seven Warriors சார்பில் சுரேஷ் மற்றும் KJB Talkies சார்பில் பாலமணிமார்பன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். KV துரை கிரியேடிவ் புரடியூசராக பணியாற்றுகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் வெளியிடுகிறார்…
இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது, விரைவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
HOT SPOT TWO MUCH!*
Announcement of the 2nd part of HOTSPOT, presented by Vishnu Vishal, produced by KJB Talkies & Seven Warriors Films, directed by Vignesh Karthik!
After the stunning success of the movie “Hot Spot” which was well received by the viewers, the second part of the movie Hot Spot is being made under the supervision of K V Durai’s Creative Production and directed by Vignesh Karthik, produced by KJB Talkies & Seven Warriors and presented by actor Vishnu Vishal on behalf of Vishnu Vishal Studios.
The official announcement of the film was made by lead actor Vishnu Vishal, director Vignesh Karthik, K J Balamanimarbhan and Seven Warriors Suresh Kumar on behalf of KJB Talkies.
An exclusive promo of “Hot Spot 2” was screened at the event which was attended by friends of the Press and Media.
In this event,
*Suresh Kumar who spoke on behalf of Seven Warriors said.*..
The second part is due to the support of media friends for Hotspot. Thanks to Vishnu Vishal Studio. V means victory and now Vishnu Vishal joins us along with Vignesh Karthik. Give your support.
*K J Balamanimarbhan spoke on behalf of KJB Talkies..*
You’re the reason for Hot Spot’s success, and now we’re celebrating the announcement of part two. The first part was released under trying circumstances. The success of the film is due to your support and you have done good marketing for the film.
At the success of Hot Spot, friend Suresh Kumar announced the second part. While talking to the director he said let’s start right away. Durai was their biggest supporter.
Vishnu Vishal Sir coming forward to present the film was a huge boost for us. Thank you & looking forward for the Support second part of Hot Spot.
*Director Vignesh Karthik said…*
Beyond the reviews of Hot Spot, your support was the reason behind the film’s success. OTT is also doing well. Now it is a pleasure to present the second part, thanks to Vishnu Vishal sir. It takes a lot of courage to present a story like this. He inspires us with great heart. Even in this promo shoot he was very simple. Just like the first part of Hot Spot 2, this second part will entertain you.
We will announce soon about the actors, actresses and technicians who will act in the film. Thank you for your continued support.
*Actor Vishnu Vishal said,*
Those who first before me say Hot Spot 2 wouldn’t have been possible without me… But that’s not the case, a good film will definitely come out somehow. Good work will definitely win. After watching the Hot Spot trailer, I was so angry that I called Kalaiarasan and scolded him. I am a person who believes that cinema always has an impact on society, so I got angry. I was like everyone else, but the positive reviews after the film came out was amazing. I just saw it in Hot Spot OTT and I liked every story so much. It taught me how to raise my son. Then I called Vignesh and praised him. He told me the story of the second part. I like it very much. I really like the last story. You will also like it when you see it. These 15 years of experience have given me the ability to pick good stories. I have become a producer. Its first step is Hot Spot 2. We are making many more good films. I will produce and deliver good films through Vishnu Vishal Studio.
Vishnu Vishal Productions and K V Durai’s banner, D Company will be producing and presenting many films in collaboration. Notification will be released soon… Thank you for your support.
The film is jointly produced by Suresh Kumar on behalf of Seven Warriors and K J Balamanimarbhan on behalf of KJB Talkies. KV Durai serves as the creative producer. Leading star actor Vishnu Vishal releases on behalf of Vishnu Vishal Studios…
The preliminary work of the film has started and the official announcement about the cast and technicians of the film will be made soon.