full screen background image
Search
Thursday 11 June 2026
  • :
  • :
Latest Update

‘தாத்தா’ குறும்பட விமர்சனம்

‘தாத்தா’ குறும்பட ரேட்டிங்: 3.5/5

Casting : Janagaraj, E.Revathi, Rishi, Gnana Shyam, Monish, Kayal Devaraj, Deepa, Murugan Manthiram, Royal Prabhakar

Directed By : Naresh

Music By : Amina Rafiq and Santhosh

Produced By : Impress Films – Kavitha.S

காலம் கடந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள் ஜனகராஜும் ரேவதியும். கால் வலியால் அவதிப்படும் தனது மனைவி ரேவதிக்கு எல்லாமுமாக இருக்கிறார் ஜனகராஜ்.

வீட்டில் இருக்கும் வேலையை முடித்து, தனது மிதி வண்டியை எடுத்துக் கொண்டு செக்யூரிட்டி வேலைக்குச் செல்கிறார் ஜனகராஜ்.

இரவானதும் மீண்டும் வீட்டிற்கு வந்து தனது மனைவியை பார்த்துக் கொள்வதும், பின் உறங்குவதுமாய் இருக்கிறது ஜனகராஜ்ஜின் இந்த ஏழ்மையான உலகம்.

ஒருநாள், தனது மகன் வழி பேரன் வீட்டிற்கு வர தாத்தா பாட்டிக்கு பெரிய சந்தோஷம். ரிமோட் கார் ஒன்று தாத்தாவிடம் கேட்க, வாங்கி தருவதாக கூறிவிடுகிறார் ஜனகராஜ்.

ஏழ்மையில் வாழும் ஜனகராஜ்ஜுக்கு ரிமோட் கார் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லை, இருந்தாலும் பேரன் மீது வைத்திருக்கும் பாசத்தால் அதனை வாங்கிக் கொடுக்க எண்ணுகிறார்.

அதற்கு அவர் என்ன செய்தார் என்பதே இக்குறும்படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக வரும் ஜனகராஜ், ஒவ்வொரு இடத்திலும் தான் ஒரு அனுபவ நடிகர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

தனது மனைவி மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், தனது பேரன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், சைக்கிள் மீது வைத்திருந்த உணர்வை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கயல் தேவராஜ், பேரனாக நடித்த ஞான ஷ்யாம், , தீபா பாஸ்கர், முருகன் மந்திரம், ராயல் பிரபாகர் என படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்துள்ளனர்.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. சிறிய மூலக்கதையை கையில் எடுத்து அதை திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குனர் நரேஷ்.

ஏழ்மையை இன்னும் உணர்வோடு ரசிகர்களிடையே கடத்தியிருந்திருக்கலாம்…

மொத்தத்தில் இந்த தாத்தா – பேரனுக்கான பாசமான வாழ்வியல்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *