‘வெப்பம் குளிர் மழை’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : MS Bhaskar, Dhirav, Ismath Banu, Rama, Master Karthikeyan, Dev Habibullah, Vijayalakshmi
Directed By : Pascal Vedamuthu
Music By : Shankar
Produced By : Hashtag FDFS Productions – Dhirav
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் பெத்தபெருமாள்(திரவ்). அவரின் மனைவி பாண்டி(இஸ்மத் பானு). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களும், ஊர்க்காரர்களும் அந்த தம்பதியை விமர்சிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள். பாண்டியை மலடி என்கிறார்கள்.
இந்நிலையில் பெத்தபெருமாளை தன் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் அவரின் அக்கா. பெத்தபெருமாளை விட அவரின் அக்கா மகள் 15 வயது சிறியவர். பாண்டியை விட்டுவிட்டு தன் பேத்தியை மணக்குமாறு பெத்தபெருமாளை அவரின் தாயும் வற்புறுத்துகிறார்.
குழந்தை இல்லை என்றாலே அது பெண்ணின் குறை என சமூகம் சொல்வது இன்னும் தீரவில்லை என்பதை படத்தில் காட்டியிருக்கிறார்கள். தன் கணவனை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வைக்கிறார் பாண்டி. பரிசோதனையில் பெத்தபெருமாளால் குழந்தை கொடுக்க முடியாது என்பதை தெரிந்து கொள்கிறார் பாண்டி. ஆனால் இதை கணவருக்கு சொல்லாமல் அறிவியலின் உதவியுடன் கர்ப்பமாகி பிள்ளை பெற்றுக் கொள்கிறார்.
குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்தே அதன் பிறப்பின் ரகசியம் பெத்தபெருமாளுக்கு தெரிய வரவே கணவன், மனைவி இடையே பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.
குழந்தை பெற முடியாத தம்பதிகள் சந்திக்கும் விமர்சனங்கள், கேலிகளை அழகாக காட்டியிருக்கிறார்கள். பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார் இஸ்மத் பானு. அவரின் நடிப்பு அருமை. அவருக்கும், திரவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வெப்பம் குளிர் மழை’ கல்யாண தம்பதிக்காண படம்.