‘பிரேமலு’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Naslen, Mamitha Baiju, Althaf Salim, Shyam Mohan M, Akhila Bhargavan, Meenakshi Raveendran, Sangeeth Prathap, Shameer Khan
Directed By : Girish A D
Music By : Vishnu Vijay
Produced By : Bhavana Studios – Fahadh Faasil, Dileesh Pothan, Syam Pushkaran
இத் திரைப்படத்தில் மமிதா பைஜு, நஸ்லென் கே கஃபூர், ஷியாம் மோகன், மீனாக்ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகன் சச்சின் படிப்பில் மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தினால் தான் விரும்பிய கல்லூரி கிடைக்காமல்
கேரளாவில் இருந்து தமிழ்நாடு சேலத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் சேர்கிறார்.
அங்கு 4 வருடமாக ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலிக்கிறார்.
முடிவில் அந்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல ஏற்க மறுக்கின்றாள் அந்தப் பெண்.
இதனால் விரக்தி அடைந்த நாயகன்.
தனது வீட்டிலும் எப்போதும் முட்டி மோதிக் கொள்ளும் பெற்றோர்கள் ஒருபக்கம்
மேலும் தனக்கு சரியான வேலையும் கிடைக்கவில்லை இதனால்
சலிப்படைந்த சச்சின் தனது ஊரை விட்டு எப்படியாவது லண்டனுக்குச் சென்று தனது வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான்.
ஆனால் விதி அவனுக்கு விசா கிடைக்காமல் தனது நண்பனுடன் கேட் பரீட்சைக்கு ஹைதராபாத்தில் கோர்ஸ் சேர வைக்கிறது.
மறுபக்கம் ஹைதராபாத்தில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் ரீனு.
புதிதான வேலை, நண்பர்கள்,கை நிறைய சம்பளம் என வாழ்க்கையை புதிதாக தொடங்கும் ரீனுவுக்கு ஒரே ஆசைதான்.
நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் வாழ்க்கையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து வரும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின்.
இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை இந்த முறையும் ஒன் சைடு லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.
எதார்த்த வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தமான உணர்ச்சிகளையும், தருணங்களையே நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் கிரீஷ் ஏ.டி
படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதைக்கு ஏற்றவாறு இயல்போடு தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக பயணித்துள்ளது
மொத்தத்தில் ‘பிரேமலு”இளம் வயதினரை கவரும்