Categories
Reviews

Don’t Trouble The Trouble திரைப்பட விமர்சனம்

Don’t Trouble The Trouble திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:

Fahadh Faasil – Suri
Ssara Palekar – Divya
Mahesh Manjrekar – Aslam
Saurabh Sachdeva – Prathap
Venkatesh Kakumanu – Mallesh
Subbaraju – Krishna
Divya Pillai – Pallavi
S S Shashank – Sanjay

Presents – S. S. Rajamouli
Produced by – Shobu Yarlagadda, Prasad Devineni, S. S. Karthikeya
Written & Directed by – Shashank Yeleti
Banners – Arka Media Works,
Showing Business
Music – Kaala Bhairava
Director of Photography – Brad Francis ACS
Stylist – Rama Rajamouli
Editor – Praveen Anthony
Script Development – S. S. Kanchi
Co-Writer – Hamza Ali
Production Designers – Mohan Nath Bingi, Sandeep Suvarna
Pro – Yuvraaj

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு கற்பனை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படம்
பணத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூரி ஒரு சிறுமியை கடத்த முயற்சிக்கிறார் ஆனால் அந்த சிறுமி ஒரு ஆன்மா என்பது அவருக்கு தெரியாது அவளது பெற்றோரை தேடும் பயணத்தில் சூரியும் அந்த சிறுமியும் எதிர்பாராத விதமாக இணைகிறார்கள் இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை
ஃபஹத் பாசில் வழக்கம்போல் தனது இயல்பான நடிப்பால் சூரி கதாபாத்திரத்தை சிறப்பாக தாங்கியிருக்கிறார் தெலுங்கு மொழியிலும் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது சாரா பலேகரும் சிறுமியாக இயல்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக ஃபஹத் மற்றும் சாரா இடையிலான காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன.

படத்தின் முதல் பாதியில் வரும் மேஜிக் காட்சிகள் நகைச்சுவை மற்றும் இருவருக்கிடையிலான பயணம் ரசிக்க வைக்கிறது குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரக்கூடிய சில நல்ல காட்சிகளும் இருக்கின்றன ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு தரமும் சிறப்பாக அமைந்துள்ளன கால பைரவாவின் இசையும் காட்சிகளுக்கு பொருத்தமாக உள்ளது
ஆனால் படத்தின் மிகப்பெரிய பிரச்சனை திரைக்கதையின் வேகம் இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்வதால் சுவாரஸ்யம் குறைகிறது சில காட்சிகள் தேவையில்லாமல் நீளமாக இருப்பதுடன் நகைச்சுவையும் எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை வலுவான கதைக்கருவை வைத்திருந்தும் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாதது படத்திற்கு பின்னடைவாக உள்ளது
மொத்தத்தில், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ஃபஹத் பாசில் மற்றும் சாரா பலேகரின் நடிப்பு மற்றும் சில அழகான கற்பனை காட்சிகளுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *