‘அங்கீகாரம் திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew:
KJR
Viji Venkatesh
Rangaraj Pandey
Vasundhara Kashyap
Mansoor Ali Khan
CREW
Director: Thenpathiyan
Producers: S. K. Prasanth, Ajith Baskar, Arun Murugan
Music Director: Ghibran Vaibodha
Action: Peter Hein
Cinematographer: A. Viswanath (DF Tech)
Editor: Dinesh
Art Director: Lalgudi Ilayaraja
Sound Designer: Sampath Alwar
Choreographer: Sherif
Publicity Designs: Prathool NT
Creative Promotions: Beatroute
PRO: Yuvaraj
Executive Producer: Spoorthy Kethineni
‘அங்கீகாரம்’ திரைப்படம் ஒரு விளையாட்டு வீரனின் வெற்றிக் கதையை மட்டும் சொல்லாமல், திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் பல வீரர்களின் வலியையும், விளையாட்டுத்துறையில் நடக்கும் அரசியல், ஊழல், அதிகார அலட்சியம் போன்ற பிரச்சினைகளையும் பேசும் சமூக அக்கறை கொண்ட ஸ்போர்ட்ஸ் கோர்ட் டிராமா.
சென்னையின் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஆதிரன், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்டு கடுமையாக பயிற்சி செய்து தேசிய அளவில் சாதித்து காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறுகிறார். ஆனால் அதிகாரிகளின் பாரபட்சமும், விளையாட்டுத்துறையில் நிலவும் ஊழலும் காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிக்கப்படுகிறது. பல இடங்களில் போராடியும் பயனில்லாத நிலையில், தனது உரிமைக்காக நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டம் நடத்துகிறார். அந்த போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
‘
தயாரிப்பாளராக இருந்து முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள கே ஜெ ஆர், ஒரு தடகள வீரருக்கான உடல்மாற்றத்திலும், பயிற்சி காட்சிகளிலும் மிகுந்த உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் நடிப்பில் அனுபவக் குறை தெரிந்தாலும், கதாபாத்திரத்தின் வலியையும் உறுதியையும் உணர்த்தும் முயற்சி பாராட்டத்தக்கது. குறிப்பாக ஓட்டப்பந்தய காட்சிகளும், நீதிமன்றத்தில் தனது உரிமைக்காக வாதாடும் காட்சிகளும் கவனம் பெறுகின்றன.
ரமா தாயாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். மகனின் எதிர்காலத்திற்காக போராடும் ஒரு ஏழைத் தாயின் உணர்வுகளை மனதை தொடும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். விஜி வெங்கடேஷ் நீதிமன்ற காட்சிகளில் தனது கம்பீரமான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார். வசுந்தரா, சிந்தூரி, இசபெல்லா, மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.
ஏ விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு விளையாட்டு போட்டிகளையும், நீதிமன்ற காட்சிகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது. சில இடங்களில் கிரீன் மேட் பயன்படுத்தியிருப்பது தெரிந்தாலும், மொத்தத்தில் காட்சிகளுக்கு நல்ல தரத்தை கொடுத்திருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை அழகாக தாங்கி செல்கிறது. தினேஷ் குமாரின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்த உதவியுள்ளது.
இயக்குநர் தென்பாதியான், ஒரு சாதாரண விளையாட்டு வீரனின் உரிமைப் போராட்டத்தை சமூக அக்கறையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில் சில சினிமாத்தனங்கள் இருந்தாலும், விளையாட்டுத்துறையில் திறமைக்கு பதிலாக அரசியல் மற்றும் ஊழல் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு ஏன் கிடைப்பதில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
மொத்தத்தில், ‘அங்கீகாரம்’ திறமையான விளையாட்டு வீரர்களின் போராட்டத்தையும், அவர்களுக்கு மறுக்கப்படும் அங்கீகாரத்தையும் நேர்மையாக பேசும் சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் டிராமாவாக மனதில் நிற்கிறது.










