full screen background image
Search
Saturday 25 July 2026
  • :
  • :

‘ஜாக்கி’ திரைப்பட விமர்சனம்

‘ஜாக்கி’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Yuvan Krishna, Ridhaan Krishnas, Ammu Abhirami, Kali, Madhusudhan Rao, Sithan Mohan, Saranya Ravi, Phathmen, Yogi, Sai Dinesh, Chidambaram, Praveen, Aathav, Eesha

Directed By : Dr.Pragabhal

Music By : Sakthi Balaji

Produced By : PK7 Studios LLP – Prema Krishnadas, C Devadas, Jaya Devadas

‘ஜாக்கி’ மதுரை மண்ணோட வாசனையும், வியர்வையும், ஆணவமும் கலந்த ஒரு ரஃப், ரா படம். இதுவரை ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை மாதிரி விஷயங்களை ஓரிரு காட்சிகள்ல பார்த்திருக்கோம். ஆனா, மதுரை பக்கங்களில் நடக்கும் கிடா முட்டு சண்டையை முழு கதையா எடுத்த முதல் படம் இதுன்றதே இதோட பெரிய ப்ளஸ்.

கதை ரொம்ப சிம்பிள். ஷேர் ஆட்டோ ஓட்டுற ராமர் (யுவன் கிருஷ்ணா), அவனோட உயிர் கிடா ‘காளி’. இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் சாம்பியன் ஆகுற, கிடா சண்டை உலகத்துல பெரிய ஆளா இருக்குற கார்த்தி (ரிதான் கிருஷ்ணாஸ்). ஒரு போட்டியில எதிர்பாராத விதமா ராமரின் காளி ஜெயிக்குது. அதோட, கார்த்தியோட ஈகோ செம்மையாக உடைஞ்சுடுது. அங்க இருந்து தான் இருவருக்குள்ள பகை ஆரம்பம்.

தோல்வியை ஏத்துக்க முடியாத கார்த்தி, பழிவாங்க ஆரம்பிக்கிறான். விளையாட்டு இருந்த இடத்துல இருந்து, அது தனிப்பட்ட வெறியா மாறி, ராமரின் வாழ்க்கையே ஆபத்துல போகுது. இந்த பகை எங்க போய் முடிகிறது, யார் ஜெயிக்கிறாங்கன்னு தான் மீதி கதை.

படத்தோட பெரிய பலமே நிஜத்தன்மை. நடிகர்கள் எல்லாரும் கிடா ஜாக்கிகளா மாறி நடிச்சிருக்காங்க. கிடாக்களோட பழகுற விதம், சண்டைக்கு தயாராக்குற காட்சிகள் எல்லாமே மேக்-அப் மாதிரி இல்ல, ரியலா தெரிகிறது. கிடா சண்டை காட்சிகள் செம்ம எர்ஜி – கொம்பு மோதும் சத்தம், தூசி பறக்கும் மைதானம், பின்னணி இசை எல்லாம் சேர்ந்து நம்மை நேரா அரங்கத்துக்குள்ள இழுத்துடுது.

யுவன் கிருஷ்ணா ராமராக ரொம்ப இயல்பா நடித்திருக்கார். கிடாவோட அவனுக்குள்ள இருக்குற பாசம் நல்லா வேலை செய்கிறது. கார்த்தியாக ரிதான் கிருஷ்ணாஸ் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு, ஆணவம் – வில்லத்தனத்தோட கம்பீரத்தை தக்க வைத்திருக்கார். ஆனா, இரண்டு பேரும் ஒரே மாதிரியான கோபம், பிடிவாதம் காட்டுறதால, சில நேரம் அவர்களுக்குள்ள மோதல் ஒன்னே டோன்ல போற மாதிரி தோணுது.

அம்மு அபிராமி காதல் கேரக்டர்ல ஒரு பிரேக் மாதிரி வர்றார். கதைக்கு பெரிய தாக்கம் இல்லன்னாலும், சீரியஸான மூட்ல கொஞ்சம் லைட்டான ஃபீல் கொடுக்கிறார். மது சூதனராவ் நடுவராக வருவது ஒரு வித்தியாசமான தேர்வு; ஆனா அவருடைய பாத்திரமும் ரொம்ப ஆழமா விரியல.

இயக்குநர் பிரகபல், கிடா முட்டு சண்டையோட வரலாறு, மரபு, பெருமை எல்லாத்தையும் அழகா காட்ட முயற்சி செய்திருக்கார். மூணு வருட ரிசர்ச் படம் முழுக்க தெரிகிறது. ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல ஒரே மாதிரி பகை, ஒரே மாதிரி சண்டைகள் திரும்ப திரும்ப வர்றதால, கொஞ்சம் ரிப்பீட்டிவ் ஃபீல் வருது.

மொத்தத்துல, ‘ஜாக்கி’ மாஸ் கமர்ஷியல் படம் கிடையாது. இது ஒரு மண் வாசனை கொண்ட, கடினமான, ரியலிஸ்டிக் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *