Categories
Uncategorized

Actress Veena Shetty Photoshoot

Categories
General News

King’s Day of Belgium was celebrated in Chennai

‘King’s Day’ of Belgium was celebrated in Chennai

Belgium is very renowned for Chocolates, Diamonds and varied range of glasses. In 1947, Belgium was the first western country to send an ambassador to India, and next year will therefore mark the 70th anniversary of the bilateral relations between the two countries. It can be mentioned that the first Indian Movie that was shot in Belgium was, Amir Khan starrer PK.

In order to honor the King every year , the kings day is celebrated. The Belgian Consulate General in Chennai had hosted a celebration on the occasion of Belgium’s King’s Day. The grand celebration of King’s day was held at Chennai on November 18th – Friday that had the eminent presence of Dr.Bart De Groof and Ms Shemain Thakur – Consul General of Belgium – Chennai, Ms Margot Prie, Ms Kathlijn Fruithof, Ms Swathi Balasubramanian, Mr. Satish – Actor – Choreographer (Achcham Yenbadhu Madamaiyada), Prince of Arcot, Mr. and Mrs. Naresh Mehta – Chairman, Mehta Jewellery, Mr. Seiji Baba -Japan Consul General, Mrs. Suhasini Maniratnam, Honorary Consul of Luxembourg in Chennai, Mr. Satish – Jupiter and many more higher generals from the country.


பெல்ஜியம் நாட்டின் பிரசித்தி பெற்ற ‘கிங்ஸ் டே’ விழா, சென்னையில் கொண்டாடப்பட்டது

சாக்லேட், வைரம் மற்றும் பல வகை கண்ணாடிகளுக்கு பெயர் போன நாடு பெல்ஜியம். 1947 ஆம் ஆண்டு, இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதற்கு முதல் முதலாக தூதுவரை அனுப்பிய நாடு பெல்ஜியம். அந்த நிகழ்வின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, பெல்ஜியம் நாட்டில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம், அமீர் கான் நடித்த ‘பி கே’.

பெல்ஜியம் நாட்டின் அரசரை கௌரவிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ‘கிங்ஸ் டே’ திருவிழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பெல்ஜியம் தூதரகம் சார்பில் இந்த விழா கடந்த நவம்பர் 18 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது….பிரம்மாண்டமான இந்த விழாவில் டாக்டர் பார்ட் க்ரூப் மற்றும் சீமைன் தாகூர் – பெல்ஜியம் தூதரகம் – சென்னை, மார்கோட் ப்ரி, கேத்லிஜின் புரூத்ஆப், சுவாதி பாலசுப்ரமணியம், நடிகர் – நடன இயக்குநர் சதீஷ் (அச்சம் என்பது மடமையடா), ஆற்காடு நவாப், நரேஷ் மேத்தா மற்றும் குடும்பத்தினர் – நிறுவனர் – மேத்தா ஜெவெல்லர்ஸ், செய்ஜி பாபா – ஜப்பான் தூதரகம், சுஹாசினி மணிரத்னம் – லூக்சம்பெர்க் தூதரகம் – சென்னை, சதீஷ் – ஜூபிட்டர் மற்றும் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் இந்த கிங்ஸ் டே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Categories
Audio Launch

Saithan Movie details

“The Demon (SAITHAN) will play a angelic role in my career…” says Arundhati Nair

Pairing opposite to a demon in acting (Vijay Antony) is not that much easy. It must require skilled talents and high level of dedication, which has been perfectly carried out by the pretty actress Arundhati Nair, the female lead of SAITHAN. Hailed from God’s own country – Kerala, the charming actress is now all set to skip the hearts of audience by her varied performance through the December 1st releasing movie SAITHAN. Produced by Fatima Vijay Antony under the banner Vijay Antony Film Corporation, the most anticipated psychological thriller SAITHAN is directed by debutante Pradeep KrishnaMoorthi.

“For the very first time in the history of man kind, the entire Tamil and Telugu Audience is eagerly waiting to welcome the Saithan…” starts Arundhati Nair, who holds a degree in commerce in a brisk tone.

“I never thought that a unleashed demon(SAITHAN) aroused from Death Valley would have play this much angelic role in my film career. Thanks to Vijay Antony sir for having confidence in me and picking me up for this story. I Can proudly say that SAITHAN has given me the opportunity to prove my skills and talents through a powerful character called Aishwarya.

Above all vijay Antony sir has given me the chance to dub in my own voice, which most of the actresses may not get that opportunity in their start up level films. SAITHAN may look like simple, silent and humble, but the audience will come to know about the real play of the demon from 1st December….” concludes Arundhati Nair in a husky tone.

“என் திரையுலக கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்….” என்கிறார் அருந்ததி நாயர்

நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்கோலாஜிக்கல் – திரில்லர் பாணியில் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் சைத்தான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

“மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ‘சைத்தான்’ னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்த ‘சைத்தான்’ , எனக்கு தேவதை……” என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்


“என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ‘ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது சைத்தான் என்பதை நான் பெருமையாக சொல்லுவேன்….

பொதுவாகவே வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, அவர்களின் சொந்த குரலில் டப்பிங் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை…..ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை என்னுடைய சொந்த குரலிலேயே சைத்தான் படத்தில் பேச செய்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….. சைத்தான் பார்ப்பதற்கு சாதுவாகவும்,எளிமையாகவும் இருக்கலாம், ஆனால் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த ‘சைத்தான்’ னின் உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்….” என்று மிரட்டும் தோரணையில் கூறுகிறார் அருந்ததி நாயர்.

Categories
Audio Launch

Kavalai Vendam Movie details

Kavalai Vendam

As the tough times of Reformation is on the full swing all that an average audience has to believe is in the concept of ‘Don’t Worry be happy’.
“Kavalai Vendam” is a perfect foil on this concept. producer Elred Kumar on behalf of his banner RS Infotainment takes it as a moral responsibility to entertain the audience with Deekay, the Director who had earlier directed “Yaamirukka Bayamey”. KAVALAI VENDAM has Jiiva – Kajal Agarwal in the lead roles and Sunaina, RJ Balaji, Mayilsamy, Balasaravanan, Manobala, Shruthi Ramakrishnan, Madhumitha and Manthra in the pivotal roles. After receiving positive acclaims for his Horror – Comedy ‘Yaamiruka Bayamey’, Director Deekay is now back with ‘Kavalai Vendam, which is all set-to hit the screens from 24th November.

“Normally three concepts in a film will pull the youngsters to the screens. Youthful songs, Don’t worry be happy concept and colourful picturizations. Our Kavalai Vendam is fully packed with these three concepts and we are pretty sure that the film will be a complete youth entertainer. Thanks to Producer Elred Kumar sir for his sustained support and open freedom, right from my first film Yaamiruka Bayamey.

I must say that Jiiva sir has lived in his character. He is evolving as one of the most successful stars in Tamil Film Industry, because of his dedication level. Likewise Kajal Agarwal has added new colours to our KAVALAI VENDAM. Her commitment and passion towards the profession is only landing her in projects with Ajith sir and Vijay sir.

Music is the perfect curtain raiser for a youthful film. In that case Music Director Leon James has come out with some fabulous melodies that will go a long way in according a great reception to the film. I can comfortably say that the visuals of our KAVALAI VENDAM will make the Audience to fall in Love, and the creator for those colourful visuals is our Cinematographer Abinandhan Ramanujam. His visual sense Match the music of leon, youthful exuberance of the lead pair Jiiva and Kajal.

We have the most happening RJ Balaji and Bala Saravanan to tickle the laughing bones.It is a UA for this film . Un limited Attention. What better option for the youth than celebrating the arrival of a winter with “Kavalai Vendam” says Director Deekay in a confident note.

“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’

வாழ்க்கை என்பது மிக சிறியது…. அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு…. என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘யாமிருக்க பயமே’ படம் மூலம் பெருமளவு பாராட்டுகளை பெற்ற இயக்குநர் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

“மனதை மயக்கும் பாடல்கள், கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்ற மைய கருத்து மற்றும் கண்களை கவரக்கூடிய எழில் மிகு காட்சிகள்…. இவை மூன்றும் ஒரு திரைப்படத்தில் இருக்குமானால், நிச்சயமாக அது இளம் ரசிகர்களின் மனதை வெல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பது தான் எங்களின் ‘கவலை வேண்டாம்’. என்னுடைய முதல் படமான ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்திலும் சரி, தற்போது உருவாகி இருக்கும் கவலை வேண்டாம் படத்திலும் சரி, எனக்கு முழு சுதந்திரத்தை தந்திருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார்….அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஜீவா சார் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்…தமிழ் திரையுலகில் ஒரு வெற்றிகரமான நட்சத்திரமாக அவர் வலம் வந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், நடிப்பிற்காக தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் அவருடைய குணம் தான். அதுமட்டுமின்றி, எங்களின் கவலை வேண்டாம் படத்திற்கு தன்னுடைய அசாத்திய நடிப்பால் புதியதொரு வண்ணம் தீட்டி இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும், காதலும் தான் அவரை அஜித் சார், விஜய் சார் போன்ற தலைச் சிறந்த நட்சத்திரங்ளின் திரைப்படங்களில் பணியாற்ற செய்திருக்கிறது.

ஒரு தரமான திரைப்படத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமைவது, அந்த படத்தின் பாட்லகள் தான். அந்த வகையில் கவலை வேண்டாம் படத்திற்காக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்து தந்த பாடல்கள் அனைத்தும், இளம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முழு காரணம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தான்…. அதே போல், கவலை வேண்டாம் படத்திற்காக ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் உருவாக்கி இருக்கும் ஒவ்வொரு எழில் மிகு காட்சிகளும் ரசிகர்களின் உள்ளங்களில் காதலை விதைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவருடைய வண்ணமயமான காட்சிகளும், லியோன் ஜேம்ஸின் மனதை வருடும் இசையும், ஜீவா – காஜல் அகர்வால் நடிப்போடு மிக அற்புதமான முறையில் ஒன்றிணைந்து இருக்கிறது.

ஆர் ஜே பாலாஜி மற்றும் பால சரவணனின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதை உறுதியாகவே சொல்லுவேன்….நிச்சயமாக ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டாடும் திரைப்படமாக எங்களின் கவலை வேண்டாம் இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் டீகே.

Categories
General News

Home Care+ Launch Images

ஹோம்கேர்+ சேவையை நவாப் முகமது அப்துல் அலி துவக்கி வைத்தார்

தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் இல்லம் தேடி வரும் மருத்துவ நலச்சேவை

சென்னை,நவ 2016: ஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனையின் டாகடர். ஜெ.எஸ்.ராஜ்குமார் முன்னிலையில், இல்லம் தேடி வரும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையான ஹோம் கேர்+ துவக்கி வைத்தார். ஹோகேர்+ இணை நிறுவனர்கள் அனிருத் பிரபாகரன், உதய் சங்கர் மற்றும் வெங்கட்ராமன் பாலாஜி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நர்ஸ் உதவி, பிசியோதெரை மற்றும் உதவியாளர் சேவைகள் ஆகியவற்றை இல்லம் தேடி வந்து வழங்கும் நலச்சேவை வேகமான வளரும் துறையாக இருக்கிறது. இத்தகைய சேவையை ஹோம்கேர்+ இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலம் வழங்குகிறது. ஹோம்கேர்+ வாடிக்கையாளர்களுக்கு தகுதி வாய்ந்த தரமான சேவை அளிப்பவர்களை தொடர்பு கொள்வதற்கான மேடையாக இருக்கிறது. எனவே அவர்கள் தனிப்பட்ட அளவில் சேவையாளர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவையில்லை. ஹோம்கேர்+ தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற சேவையாளர்களை தேர்வு செய்து, சிறந்த தொழில்முறைத்தன்மைக்கு உறுதி அளிக்கிறது.

இந்த அறிமுக நிகழ்ச்சியின் போது, லைப்லைன் மருத்துவமனை டாக்டர்.ஜே.எஸ்.ராஜ்குமாருக்கு மருத்துவத்துறையில் முன்னோடியாக இருப்பது மற்றும் மருத்துவ சிகிச்சையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவருவதில் முனைப்பு காட்டுவதையும் பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அனிருத் பேசும் போது, “இந்திய மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் முதியோர் நலம் முக்கியத்துவம் பெறுகிறது. இல்லத்திலேயே பிரத்யேகமான மருத்து சேவை தேவைப்படும் நோயாளிகளை மனதில் கொண்டு, பாலாஜி, உதய் மற்றும் நான் ஹோம்கேர் + சேவையை துவக்கியுள்ளோம்.இன்றைய பரபரப்பான உலகில் இத்தகைய முதியோரின் உறவினர்களுக்கு நிம்மதி மற்றும், தொழில்நுட்ப இடைமுகம் தேவைப்படுகிறது” என கூறினார்.

நிறுவனர் உதய் பேசும் போது, நன்கு பயிற்சி பெற்ற சேவையாளர்களை கொண்டு பல மாதங்களாக இந்த சேவையை பரிசோதனை செய்து வந்துள்ளோம். சேவை அளிப்பவர்கள் அல்லது நர்ஸ்களுக்கு இணைதளம் அல்லது மொபைல் மூலம் மருத்துவர்கள் வழிகாட்டும் வசதி இருப்பது மேலும் சிறந்த விஷயம்” என்று கூறினார்.”

நிறுவனர்களில் ஒருவரான பாலாஜி, “சோதனை முயற்சிக்குப்பிற்கு ஹோம்கேர்+ இப்போது அறிமுகமாகிறது. இந்த சேவையை www.homecareplus.in மூலம் அல்லது மொபைல் செயலி மூலம் அணுகலாம். எங்கள் நிறுவன பெயரில் உள்ள + குறியீடு மூலம் இல்லம் தேடி வரும் சேவையை விட கூடுதலாக அளிப்பதை உறுதி செய்கிறோம். நாங்கள் நம்பிக்கை அளிக்கிறோம்” என்று கூறினார்.

இந்த மேடையில் இணைய விரும்பும் சேவையாளர்கள் அல்லது நர்ஸ்கள் தொடர்பு கொள்ளாலாம்: +91 7333 893 9497 ,இமெயில் orders@homecareplus.in.

நர்ஸ்கள், அல்லது மருத்துவர்கள் உடனடியாக நோயாளிகள் பின்னணியை புரிந்து கொள்ள வசதியாக நோயாளிகள் தகவல்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட உள்ளன.

www.homecareplus.in

பி.கே.உதய்சங்கர், இயக்குனர் @ 7338939497

Categories
General News

Chennai 28 II Movie details

“I was trained in full swing to catch the ball in the second innings…” says Premgi Amaren of ‘Sharks’ team

‘Comedy is really a serious business’, but it is a hobby and passion for the ‘SHARKS’ team star ‘Seenu’ aka Premji Amaran, the creator of the famous dialogue, “Enna Koduma Sir Idhu…” No one can forget his lightening speed fielding performance in ‘Chennai 28’ which always leads to a catch drop. But this time, the energetic actor Premji Amaran has trained in full swing for the second innings of ‘Chennai 28’, and the expectations of the Audience are at its peak since they are all set to watch the fielding tactics of matured but still a eligible bachelor Seenu. Produced and Directed by Venkat Prabhu under the banner Black Ticket Company, the second innings of Chennai – 28 – II that is going to hit the screens from 9th December has the cream of the prequel’s cast retained . It is to be noted that the film Chennai – 28 – II is strongly backed up by the music of ‘Rhythmic Master’ Yuvanshankar Raja very similar to the part 1 .

“Ten years have passed by since we released Chennai 28 part 1. So much have changed these years, but not our enthusiasm. We are still and for that matter for ever a young and energetic team. .Chennai 28 second part is set on rural back drop. There are plenty of avenues to keep the audience pulled to the theatres and hooked to the screens. The drive to watch this film will be there in plenty. We have pitched in the best of commercial elements that could keep the youth jump over the boundaries. Need less to say that the young women will be bowled over my screen presence ” says Seenu aka Premji Amaran with his trade mark finger signage.

சென்னை 28 – இரண்டாம் பாகத்தில் ‘ஆட்ட நாயக விருதை’ தட்டிச் செல்ல தயாராக இருக்கிறார் பிரேம்ஜி அமரன்

பிறர் மனதை எந்த விதத்திலும் புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உன்னதமான குணம்…. அப்படிப்பட்ட சிறப்பம்சத்தோடு திரையில் தோன்றி, ரசிகர்கள் ஒவ்வொருவரையும் நகைச்சுவையின் உச்சத்திற்கே எடுத்து செல்ல கூடிய ஒரு நடிகர், பிரேம்ஜி அமரன். பத்து வருடத்திற்கு முன் சென்னை 28 திரைப்படத்தில் இவர் பேசிய “என்ன கொடும சார் இது….” என்ற வசனம், இன்றளவும் இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இவருடைய மின்னல் வேக ‘பீல்டிங்’ தான் சென்னை 28 முதல் பாக ஆட்டத்தின் தனி சிறப்பு…..ஆனால் கைக்கு நேராக வரும் பந்தை மட்டும் பிடிக்க தவறி விடுவார்….. வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி நடக்க இருக்கும் சென்னை 28 – ஆட்டத்தின் இரண்டாம் பாகத்தில் எப்படியாவது பந்தை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி, கடும் பயிற்சிகளை மேற்கொண்ட ‘சீனு’ (பிரேம்ஜி அமரன்), சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் திருமணம்
ஆகாத இளைஞராகவே வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் சென்னை 28 – II திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அதே அணியினர் தான், இந்த ஆட்டத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தன்னுடைய துள்ளலான இசையால் இசை பிரியர்களை தன் வசம் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா சென்னை – 28 – II பாகத்தின் இசையமைப்பாளராக திகழ்வது மேலும் சிறப்பு.

“எங்கள் சென்னை 28 திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது…. ஆனால் எங்கள் அணியினரின் உற்சாகமும், வேகமும் சிறிதளவு கூட குறையவில்லை….துடிப்பான அணியாக நாங்கள் செய்லடுவதற்கு அதுவே முக்கிய காரணம். எங்களின் இரண்டாம் பாகத்தை நாங்கள் கிராமத்து பிண்ணனியில் படமாக்கி இருக்கிறோம். …ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த உற்சாகத்தோடு வைத்துக் கொள்ளும் சுவாரசிய காட்சிகள் பல எங்களின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றது…. இந்த இரண்டாம் ஆட்டத்தை காண வரும் ஒவ்வொரு இளம் ரசிகர்களும் சிக்ஸர் கோட்டை தாண்டி நான் அடிக்கும் பந்தை பிடிக்க தயாராக இருங்கள்…. அதுமட்டுமின்றி, நான் தோன்றும் காட்சிகள் அனைத்தும் இளம் பெண்களின் மனதை வெல்ல கூடியதாக இருக்கும்….” என்று தனக்குரிய தனித்துவமான குறும்பு பாணியில் சொல்கிறார் ‘சீனு’ என்கின்ற பிரேம்ஜி அமரன்

Categories
Uncategorized

Actress Ashwathy Ravikumar Stills

Categories
General News Press Meet

Actress Radha’s Hotel bagged the ‘Best Beach Hotel’ award in 2016 South Asian Travel Awards (SATA)

Actress Radha’s ‘Uday Samudra Leisure Beach Hotel & Spa’ bagged the ‘Best Beach Hotel’ award in 2016 South Asian Travel Awards (SATA)

Veteran actress Radha who currently travels in a success path as a business woman, has now bagged the ‘Best Beach Hotel’ award for her ‘Uday Samudra Leisure Beach Hotel & Spa’ in South Asian Travel Awards (SATA) – 2016. The grand award ceremony that witnessed the presence of top most industrialists was held recently at Colombo, Srilanka. It is to be noted that Radha’s ‘Uday Samudra Leisure Beach Hotel & Spa’ has earned five awards under the categories ‘Leading beach resort, India’, ‘Leading Spa hotel – India’, ‘Leading Spa – South India’, ‘Leading CSR hotel’ – South India’ and ‘The best food and beverage hotel – South India’.


சிறந்த கடற்கரை ஹோட்டலுக்கான விருதை பெற்று இருக்கிறது நடிகை ராதாவின் ‘உதய் சமுத்ரா ஹோட்டல்’.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ராதா. தற்போது இவர் கேரளா – கோவலத்தில் நடத்தி வரும் ‘உதய் சமுத்ரா ஹோட்டல்’, சமீபத்தில் இலங்கை – கொழும்புவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான ‘சவுத் ஏசியா டிராவல் அவார்ட்’ விழாவில், சிறந்த கடற்கரை ஹோட்டலுக்கான விருதை பெற்று இருக்கிறது. பல முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விருது வழங்கும் விழாவில், ‘ இந்தியாவின் முன்னணி பீச் ரிசார்ட்’, ‘தென் இந்தியாவின் முன்னணி ஸ்பா ஹோட்டல்’ , இந்தியாவின் முன்னணி ‘ஸ்பா’, தென் இந்தியாவின் முன்னணி சி எஸ் ஆர் ஹோட்டல், மற்றும் ‘தென் இந்தியாவின் சிறந்த உணவகம்’ என மொத்தம் ஐந்து விருதுகளை ராதாவின் ‘உதய் சமுத்ரா ஹோட்டல் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
Audio Launch

Kutram 23 Movie Stills

Categories
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!