‘போர்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Arjundas, Kalidas Jayaram, T.J.Banu, Sanchana Natarajan, Amrutha Srinivasan, Mervyn Rozario
Directed By : Bejoy Nambiar
Music By : Sanjith Hegde ,Dhruv Visvanath, Gaurav Godkhindi – Backround Score : Modern Tape Scores (Harish Venkat & Sachidanand Sankaranarayanan), Gaurav Godkhindi
Produced By : T series, Getaway pictures, Roox media
போர் திரைப்பட கதை :
டேவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி போன்ற படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார், இம்முறை கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் சீனியர்-ஜூனியர் மோதலை படமாக்கியிருக்கிறார். நிச்சயமாக அந்தப் பிரச்சனையை மட்டுமே படம் சார்ந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சிறுவயதில் நடந்த கசப்பான சம்பவத்தால் அர்ஜுன் தாஸ் (பிரபு) மற்றும் காளிதாஸ் ஜெயராம் இடையே மீண்டும் பிரச்சனை உண்டாவது படத்தின் ஒன் லைனர் கதையாக இருந்தாலும், இவர்களைச் சுற்றி பல கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணி கதைகள் ஒரே வரிசையில் நகர்கின்றன.
கல்லூரியில் நடக்கும் அநியாயங்களுக்கு சவால் விடும் போராளிப் பெண்ணாகவும் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக டி.ஜே.பானு (காயத்ரி) வருகிறார். ஒரு மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டியதற்காக கல்லூரி பேராசிரியரை தட்டி கேட்கிறார். அவருடன் இருக்கும் நித்யஸ்ரீ (வெண்ணிலா) கல்லூரியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில் சத்யாவும் (அரசியல் கட்சித் தலைவர், கல்லூரி அறங்காவலர் மகள்) அரசியல் எதிர்காலம் குறித்து யோசித்து வரும் நிலையில் கல்லூரியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்படுகிறார். வெண்ணிலா மற்றும் சத்யா இருவரும் தன் பாலின ஈர்ப்பாளர்கள். முன்னாள் காதலர்களான இவர்களுக்கு பதவி விஷயத்தில் தகராறு ஏற்படும். இதில் சாதி அரசியலும் நடக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
Por Movie Review :
ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களை விரிவுபடுத்த முயன்ற இயக்குனர் தனது முயற்சியில் தோல்வியடைந்தார். கதையை ஒன்றோடொன்று சிக்கலாக உள்ளதால் படத்தின் சாராம்சம் இழக்கப்படுகிறது. நிறைய விஷயங்களை விவரித்துள்ளதால் படம் பெரிதாக இல்லை. கதாபாத்திரங்கள் தனித்து நிற்கவில்லை என்று சொல்ல முடியாது. அர்ஜுன் தாஸை வில்லனாகவும், அடிமையாகவும் பார்த்தவர்களுக்கு பிரபுவின் கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் பெண்கள், அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரைப் பார்த்து மகிழலாம். ஆண்களுக்காக, டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், வெண்ணிலா, ஸ்ரீமா உபாத்யாயா என ஏராளமான தேவதைகள் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க ட்ரிப்பியான இசையும் மற்றும் காட்சிகளும் நிறைந்துள்ளது. இதன் பாடல்கள் அடுத்த சில நாட்களுக்கு இன்ஸ்டா ரீல்களில் ட்ரெண்ட் ஆகும் என்று கூறப்படுகிறது. நமக்கு கதை முக்கியமில்லை, காரணம் தெரியாமல் படம் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை (Por Movie Review) ஒருமுறை பார்க்கலாம்.