‘முடக்கறுத்தான்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Dr.K.Veerababu, Mahana, Super Subbarayan, Mayilsamy, Kadhal Sukumar, Sams, Ambani Sankar, Venkal Rao
Directed By : Dr.K.Veerababu
Music By : Sirpi
Produced By : Vayal Movies
குழந்தை கடத்தலை கண்டுபிடிக்கும் கதாநாயகன் குறித்த கதை.
கொரோனா காலகட்டத்தின் போது ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தன்னுடைய பிரத்யேக சித்தமருத்துவ சிகிச்சையால் காப்பாற்றி உண்மையான நாயகனாக போற்றப்பட்டவர் சித்தமருத்துவர் வீரபாபு. அவருக்கு ஒரு எக்சன் என்டர்டெய்னர் படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அதனால் உருவான படம் தான் முடக்கறுத்தான். இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? என்பதை தொடார்ந்து காண்போம்.
தென் தமிழகப் பகுதியொன்றில் மூலிகைகளை உற்பத்தி செய்து? அதை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் வீரபாபு. அத்துடன் தன்னுடைய கண்ணில் படும் ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணம் தொடர்பான பணிகளுக்காக அவர் சென்னைக்கு வருகிறார். அங்கு அவருடைய உறவினரின் குழந்தையைக் காணவில்லை. இது தொடர்பாக குழந்தையை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் பணிப்பெண் உங்கள் குழந்தை பிச்சையெடுப்பதற்காக வாடகைக்கு விட்டிருக்கிறேன் என பதிலளிக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் வீரபாபு, காவல்துறையின் உதவியுடன் குழந்தைகளை வைத்து சாலையில் பிச்சையெடுக்க வைக்கும் கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். இதன் பின்னணியும்,வலை பின்னலும் பெரிதாகயிருக்கிறது. அதனை எப்படி அழித்தார் என்பது தான் இப்படத்தின் கதை.
கதையின் நாயகனான வீரபாபுவிற்கு நடிப்பு என்றால் கிலோ என்ன விலை? எனக் கேட்கும் புதுமுகமாக இருக்கிறார். ஆனால் தனக்கு எக்சன் காட்சிகளில் அதிரடியாக நடிக்கவரும் என்பதை நிரூபித்திருக்கிறார். நாயகி மஹானா சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார்.
வாய்ப்பு கிடைத்தால் மின்னுவார். இரண்டாம் பாதியில் கௌரி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகருக்கு.. நடிப்பதற்கு அவ்வளவு வாய்ப்பு இருந்தும் வீணடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு, கலை இயக்கம் பட்ஜட்டை பிரதிபலிக்கிறது. படத்தொகுப்பு, பின்னணியிசை பரவாயில்லை.
மொத்தத்தில் ‘முடக்கறுத்தான்’ எல்லோருக்கும் நன்மை செய்வான்.