Casting : Venkat Sengutuvan, Evana, Aaradhya, MS Baskar, Naren, Bava Chelladurai, Sudharson Govind, Praveen Kumar.E
Directed By : Mandra Veerapandiyan
Music By : Karthik Raja
Produced By : GS Cinemas International – GS Brothers
இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன், பாவா செல்லத்துரை என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிடைத்திருந்தது.
இந்த படத்தின் ஹீரோவான வெங்கட் செங்குட்டுவன் உடல் வளர்ச்சி இல்லாமல் மூன்று முதல் நான்கு அடி உயரம் மட்டுமே உள்ளார், இதனால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். திருநெல்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் இவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் ஓடி விடுகிறார், இதனால் அவரது அப்பா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அம்மா இருவரும் தற்கொலை செய்து விடுகிறார். இதன்பிறகு தனது அக்காவை தேடி சென்னைக்கு செல்கிறார் வெங்கட். அங்கு தொடர்ச்சியாக பல மர்ம மரணங்கள் நிகழ்கிறது அதை எப்படி வெங்கட் கண்டுபிடிக்கிறார் என்பதை மதிமாறன் படத்தில் கதை.
குள்ளமாக இருப்பவர்களை கிண்டல் செய்யும் வழக்கம் பல இடங்களில் இருந்து வருகிறது, அதை நாம் கண்ணெதிரே பார்த்தும் இருப்போம். அப்படி ஒரு பிரச்சனை உள்ள நபரை வைத்து ஒரு முழு படத்தை எடுத்துள்ள இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியனுக்கு பாராட்டுக்கள். குள்ளமாக இருப்பதால் ஒருவர் என்னென்ன கேலி கிண்டலுக்கு ஆளாகிறார் என்பதை படம் முழுக்க காட்டியுள்ளார். மேலும் அதை வைத்து கதை, திரைக்கதையை சுவாரசியமாக எடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள வெங்கட் செங்குட்டுவன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், படத்தை தனது தோள்களில் சுமந்து செல்வதும் வெங்கட் தான். நடிப்பு, நடனம் என தனது திறமையை படத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட எதிர்காலம் உள்ளது.
கதாநாயகியாக நடித்து வரும் இவானா இந்த படத்தில் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் இவானா. மேலும் போஸ்ட் மாஸ்டராக வரும் எம்எஸ் பாஸ்கர், போலீசாக வரும் ஆடுகளம் நரேன், செக்யூரிட்டியாக நடித்துள்ள பாவா செல்லதுரை என அனைவரும் நல்ல பெர்பார்மன்சை வழங்கி உள்ளனர். படம் ஒரு கட்டத்தில் இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கு மாறுகிறது. அங்கிருந்து திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் இருந்தது, பாடல்களை இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. முதல் பாதி அடுத்தடுத்த திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக செல்கிறது, அதே சமயத்தில் இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் படம் முழுக்க வரும் டயலாக்குகளும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் இருக்கும் லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர மதிமாறன் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
















