full screen background image
Search
Friday 28 March 2025
  • :
  • :
Latest Update

D3 திரை விமர்சனம்

D3 திரைப்பட ரேட்டிங்: 3/5

பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டி3 படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் பிரஜின், வித்யா பிரதீப், சார்லி, காயத்ரி யுவராஜ், ஆனந்தி, மோகமுள் அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-மணிகண்டன் பி.கே, எடிட்டிங்-ராஜா, இசை-ஸ்ரீ;;;;ஜித் எடவானா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.

குற்றாலத்தில் புதிதாக பொறுப்பேற்கும் இன்ஸ்பெக்டரான விக்ரம் (பிரஜின்), சாலையில் தனியாக நடந்து செல்லும் இரண்டு பேர் வெவ்வேறு நாளில் லாரியில் அடிபட்டு இறக்கின்றனர். மேலும் வழக்குகளுக்கு இடையிலான ஒற்றுமை அவரை சில வழிகளுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. விசாரணை தொடரும் போது, விபத்துகள் என்ற பெயரில் மூடப்பட்ட 203க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே நிலையத்தில் இருப்பதை விக்ரம் கண்டுபிடிக்கிறார்;. இந்த வழக்கு தனது உயிருக்கு மட்டுமல்ல, அவரது மனைவி மாயாவின் (வித்யா பிரதீப்) உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட இழப்பு இருந்தபோதிலும், அந்த இடத்தையே உலுக்கிய இந்த தொடர் குற்றங்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை விக்ரம் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கொலைகளின் பின்னணி என்ன? என்பதை ப்ரஜின் கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

பிரஜின் கண்டிப்பும், சுறுசுறுப்பும் நிறைந்த போலீஸ் வேடத்தில் முதன்முறையாக நடித்திருக்கிறார், அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நம்பும்படியாகவும் அவருடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது, அவரிடமிருந்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக உழைப்பை கொடுத்திருக்கிறார்.

மனைவியாக வரும் வித்யா பிரதீப் காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

படத்தில் பிரஜினின் நண்பராக ராகுல் மாதவ் மிரட்டல் கதாபாத்திரம் கவனிக்க வேண்டிய ஒன்று. மற்ற நடிகர்களான சார்லி, காயத்ரி யுவராஜ், அபிசேக் ஆகியோர் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

;மணிகண்டன் பி.கே.யின் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித்தின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு சில பிரேம்கள் பாத்திரங்களின் உலகத்திற்கு நம்பை இழுத்து செல்லும் அளவிற்கு கொடுத்துள்ளனர். இருப்பினும், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் பாடலை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ராஜா ஆறுமுகம் எடிட்டிங்கை நச்சென்று கொடுத்திருக்கிறார்.

குற்றாலத்தில் நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்;ளார் இயக்குனர் பாலாஜி. டி3யில் கேஸ் மற்றும் லீட்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், உண்மையான விறுவிறுப்பு இருக்க வேண்டிய இரண்டாம் பாதியில் பலவீனமாக அம்பலப்படுத்தப்படும் மருத்துவக் குற்றம், நாம் அனுதாபப்படுவதற்கு போதுமானதாக இல்லை. ஆயினும்கூட, இரண்டாம் பாதியில் நம்மை ஈடுபடுத்த வைக்க இரண்டு திருப்பங்கள் இருப்பதாலும் ஆரம்பத்திலிருந்தே குற்றவாளி யார் என்பது பற்றிய எந்தத் துப்பும் தராத திரைக்கதையை கொண்டு செல்வதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் பாலாஜி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *