பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் அடிதடி சண்டைக் காட்சிகள் நிறைந்த அதிகாரபூர்வமான டிரைலரை வெளியிட்டது
அமேசான் ஸ்டூடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இணைந்து வெளியிடும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையத் தொடர் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது
கால்வர் சிட்டி, கலிபோர்னியா—மார்ச் 6, 2023— பிரைம் வீடியோ, அடுத்து வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர் சீட்டடெல் காவியத் தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை முதல் முதலாக இன்று வெளியிட்டது. இந்த அதிரடியான குளோபல் ஸ்பை சீரிஸின் ஆறு எபிசோடுகள் அடங்கிய முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, இரண்டு எபிசோடுகளுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது அதைத் தொடர்ந்து மே மாதம் முழுவதும் 26 ஆம் தேதிவரை ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய எபிசோடு திரையிடப்படும். எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த உணர்ச்சி மிகுந்த திரைப்படத்தைத் ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO மற்றும் ஷோரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மேலும் இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சீட்டடெல் வெளியிடப்படுகிறது
சிட்டடெல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சீட்டடெல் நிழல் உலகை ஆண்டுகொண்டிருந்த ஒரு வலிமைமிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோரை இயக்கிக் கொண்டிருந்தவர்களால் -அனைத்து மக்களின் பாதுகாப்பையும் பத்திரத்தன்மையையும் நிலைநிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட- இந்த சுதந்திரமான உலகளாவிய உளவு நிறுவனமானது, அழிக்கப்பட்டது, சீட்டடெல் வீழ்ச்சியின் போது உயர்நிலை உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்) இருவரும் மயிரிழையில் உயிர்தப்பினாலும் அவர்களின் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது. அப்போதிருந்து தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கைப்பயணத்தை மேற்கொண்டு, மறைந்தே வாழ்ந்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் இரவு, மேசன் உடன் பணியாற்றிய பணியாளர் பெர்னார்ட் ஆர்லிக் (ஸ்டான்லீ டுக்ஸி) ஒரு இக்கட்டான நிலையில் புதிய உலக அமைப்பு ஒன்றை நிறுவும் மாண்டிகோரின் முயற்சிகளை முறியடிக்க, மேசனின் உதவியை அவசரமாக வேண்டி, அவரைத் தேடி வருகிறார். மேசன் தனது பழைய பணியாளர் நதியாவை தேடிக் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு இரகசியங்கள் பொய்கள், மற்றும் ஆபத்தான அதே சமயம் அழியாத கொழுந்துவிட்டு எரியும் காதல் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட உறவுடனான… தொடர்ந்த போராட்டத்தின் நடுவே மாண்டிகோரின் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் ஒரேயொரு பணியிலக்கை நோக்கி அந்த இரண்டு ஒற்றர்களும் உலகமெங்கும் சுற்றி வரச்செய்யும், அந்தப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
மேசன் கேன் ஆக ரிச்சர்ட் மேடன், நடித்திருக்கும் இந்தத் தொடரில் நதியா சிங்காக பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ,பெர்னார்ட் ஓர்லிக்காக ஸ்டான்லி டூசி , டாலியா ஆர்ச்சராக லெஸ்லி மான்வில்லே, கார்ட்டர் ஸ்பென்ஸாக ஓஸி இகிலே, அபே கன்ராய் ஆக ஆஷ்லே கம்மிங்ஸ்ஸும் வும், ஆண்டர்ஸ் சில்ஜே மற்றும் டாவிக் சில்ஜே ஆக ரோலண்ட் முல்லர், ஹென்ட்ரிக்ஸ் கான்ராய் ஆக கயோலின் ஸ்பிரிங்கால் ஆகியோரும் இன்னும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO சார்பாக , AGBO க்காக அந்தோனி ரூசோ, ஜோ ரூசோ, மைக் லரோக்கா, எஞ்சலா ரூசோ ஓட்ஸ்டாட் மற்றும் ஸ்காட் நீம்ஸ் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், டேவிட் வெயில் ஷோரன்னராகவும் நிர்வாக தயாரிப்பாளராகவும் செயல்பட்டு சீட்டடெல் தயாரிக்கப்பட்டது. ஜோஷ் அப்பெல்பாம், ஆண்ட்ரே நெமெக், ஜெஃப் பிங்க்னர் மற்றும் ஸ்காட் ரோசன்பெர்க் ஆகியோர் மிட்நைட் ரேடியோவின் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றினர். நியூட்டன் தாமஸ் சைகல் மற்றும் பேட்ரிக் மோரன் ஆகியோரும் நிர்வாக தயாரிப்பாளர்களாக பங்காற்றினர்.
*
Citadel Continues
Citadel, starring Richard Madden and Priyanka Chopra Jonas and featuring Stanley Tucci and Lesley Manville, is the debut of a landmark global franchise. Executive produced by the Russo Brothers’ AGBO, Citadel and its subsequent series traverse the globe with interconnected stories. Each Citadel series is locally created, produced, and filmed in-region, and stars top talent, forming a distinct global franchise. Series are already underway in Italy and India, respectively, starring Matilda De Angelis, Varun Dhawan, and Samantha Ruth Prabhu.
# # #
Official Prime Video Social
Twitter: @CitadelOnPrime
Instagram: @CitadelOnPrime
Facebook: @CitadelOnPrime
Hashtag: #CitadelOnPrime