‘நெடுநீர்’ திரைப்பட ரேட்டிங்:3/5
குறைந்த முதலீட்டில் படம் இயக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் முதலில் ஒரு வேண்டுகோள்.
இந்த நெடுநீர் படம் பல காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.
பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. எட்டு வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன்.
கடலின் அழகு, கடலின் ஆழம், கடலின் ஆர்ப்பரிப்பு, கடலின் மர்மம், கடலின் அமைதி,கடலின் பிரம்மாண்டம் இதுவே நெடுநீர்.
நாயகனாக நடித்த ராஜ் க்ரிஷ், கதாநாயகி இந்துஜா, முக்கியமான கதாபாத்திரத்தில் அண்ணாச்சியாக நடித்த முருகன் மற்றும் மோகன் எஸ் கே மின்னல் ராஜா அனைவரது நடிப்புமே நிச்சயமாக பேசப்படுவது உறுதி.
இதற்கு அடுத்தபடியாக படத்தின் சண்டைக் காட்சியை நிச்சயமாக சொல்லியாக வேண்டும் சண்டை பயிற்சி அமைத்திருப்பது எஸ் ஆர் ஹரி முருகன் இது முதல் படமா என்று தெரியாத அளவுக்கு நல்லாவே பண்ணி இருக்கிறார்.
கேமராவில் அதிக வண்ணங்கள் இல்லை என்றாலும் கடல் பின்னணி கதை என்பதால் நம் கண்களை இதமாக்குகிறது.
கேமரா மேனுக்கு வாழ்த்துக்கள்.
படத்தை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இயக்கியிருக்கும் இயக்குனர் பத்மநாபனுக்கு நிச்சயமாக அடுத்தடுத்த படங்கள் தமிழ் சினிமாவில் கிடைக்கும்.