full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

‘Victim’ திரைப்பட விமர்சனம்

‘Victim’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

இயக்குனர்கள்: பா.ரஞ்சித்,ராஜேஷ்,சிம்புதேவன்,வெங்கட் பிரபு,இயக்கத்தில் நான்கு பாகங்களாக ‘நடைமுறை வாழ்வியல், எதார்த்தம் மற்றும் விறுவிறுப்புடன் கூடிய திரில்லர்’ படமாக வெளிவந்திருக்கும் இந்த #Victim #victimmovie திரைப்படம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக Aug 5th “SonyLiv” வெளிவர இருக்கின்றது.

Victim Story:
Victim is a Tamil anthology, an action thriller drama movie consisting of four short films directed by Chimbu Devan, M Rajesh, Pa.Ranjith, and Venkat Prabhu. The anthology movie features Prasanna, Amala Paul, Priya Bavani Shankar, Nasser, Thambi Ramaiah, Natraj ( Natty ), Kalaiarasan, Guru Somasundaram, Krish, and others. The music for the movie was composed by Sam C S, Premgi, Ganesh Sekar, and Tenma, while cinematography for the movie was handled R.Saravanan, Sakthi Saravanan, and Thamizh A Azhagan. The movie was edited by Lawrence Kishore, Akash Thomas, Selva RK, and Venkat Raajen.

The movie Victim streaming from Aug 5 only on Sony LIV.The anthology Movie Victim.

பாகம்-1, Dhammam Movie Rating: 3/5
Directed by: Pa Ranjith
Stars: Guru Somasundaram, Kalaiyarasan.

படம் ஆரம்பிக்கும்போதே புத்தர் சிலையுடன் காட்சி நகர்கிறது.விவசாய நிலத்தில் நெல் நடவுக்காக குரு சோபாசுந்தரம் வயல் பார்த்தியை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது தன் மகள் புத்தர் சிலை மேல் விளையாடிக் கொண்டிருப்பது கண்டு கோபம் கொண்டு திட்டுகிறார் அதைப் பொருட்படுத்தாத அச்சிறுமி புத்தர் என்னப்பா என்னை வழிபட வேண்டுமென்றா சொன்னார் என்று தந்தையிடமே வாக்குவாதம் செய்து வயலின் பத்தியில் மின் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். குரு சோமசுந்தரமும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து கொண்டிருக்கும் பொழுது பக்கத்து நிலத்தின் உரிமையாளரான கலையரசன் வீம்பு பிடியாக குரு சோமசுந்தரத்தின் மகளிடம் வாக்குவாதம் செய்து அது முற்றி சேற்றில் விழுந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது குரு சோமசுந்தரம் தடுக்கிறார் அப்பொழுது எதிர்பாராமல் மம்முட்டியில் அடிபட்டு ரத்தம் வழிந்தோட கலையரசன் வயலில் துடித்து துடித்து இழக்கிறாரா அல்லது பிழைக்கிறார் என்பதே மீதி கதை..

பாகம்-2, Mirrage Movie Rating: 2.5/5
Directed by: M. Rajesh
Star: Natty, Priya Bhavani Shankar

பிரியா பவானி சங்கர்,நடராஜ் நடித்திருக்கும் இந்த பாகத்தில் சைக்கோ திரில்லராக கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர்.ECR ரெசோட்டில் அலுவலக வேலை விஷயமாக பிரிய பவானி சங்கர் தங்குகிறார் அந்த விடுதியில் முதலாளியாக நடராஜ் இருக்கிறார். பல நாள் அந்த விடுதியில் யாரும் தங்காத காரணத்தினால் கூகுளில் அந்த விடுதியைப் பற்றி பவானி சங்கர் தேடுகிறார்,பிறகு நடராஜ் சைக்கோவாக நடந்து கொள்ளும் விதமும் அதிலிருந்து ப்ரியா பவானி சங்கர் எப்படி தப்பிக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக இயக்குனர் எடுத்திருக்கிறார்.படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் இக்கதையில் யார் சைக்கோ என்பதே தெரியாமல் பல இடங்களில் ரசிகர்கள் குழம்பி போவார்கள். தொழில்நுட்ப ரீதியில் இந்த படம் மிக அருமையாக வந்துள்ளது குறிப்பாக கேமரா, லைட்டிங், எடிட்டிங், சவுண்ட் மிக்சிங் என அனைத்திலும் தரமாக உள்ளது.

பாகம்-3, Kottai Pakku Vathalum Mottai Maadi Sitharum, Movie Rating: 3.5/5
Directed by: Chimbudevan
Stars: Nassar, Thambi Ramaiyah

தம்பி ராமையா, நாசர் நடித்திருக்கும் இக்கதையில் நடைமுறையில் நாம் அனைவரும் அனுபவித்த ‘கொரோனா லாக்டவுன்’ சமயத்தில் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தோம் என்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. தம்பி ராமையா ஒருவார இதழ் பத்திரிக்கையில் சப் எடிட்டராக பணிபுரிகிறார்,கொரோனா சமயத்தில் பல முன்னணி நிறுவனங்கள் வருமானம் இன்றி தவிக்கும் பொழுது தம்பி ராமையா வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தில் பல பேரை வேலை விட்டு அனுப்புகிறார்கள். அலுவலக மூத்த எடிட்டர் தம்பி ராமையாவுக்கு போனில் அடுத்து லிஸ்டில் உங்களுடைய பெயர் தான் முதலில் இருக்கிறது என்று சொல்ல அவர் கலக்க அடைகிறார். ஒரு நல்ல இன்டர்வியூ கவர் ஸ்டோரியை பப்ளிஷ் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று ராமையாவின் யோசனை, அப்பொழுது ஒரு சித்தரை பற்றிய தகவல் தம்பி ராமையாவிடம் கிடைக்க அவரை எப்படி அணுகி பேட்டி எடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது சில தகவல் கிடைக்கின்றது,அதன்படி நாசர் சித்தராக கதையில் வருகிறார் அவர் சொல்லும் ஒவ்வொரு டாஸ்க்கும் தம்பி ராமையா சரியாக முடிக்க வேண்டும் அப்பொழுதுதான் நீ கேட்கும் வரம் கிடைக்கும் என்று கட்டளையிடுகிறார். சித்தர் சொன்ன கட்டளைகளை தம்பி ராமையா சரியாக செய்து முடித்தாரா இல்லையா என்பது படத்தின் மீதி கதை.

பாகம்-4, Confession Movie Rating: 3/5
Directed by: VenkatPrabhu
Stars: Amala Paul, Prasanna

அமலாபால்,பிரசன்னா இக்கதையில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் திரில்லராக கதை நகர்கிறது,ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் அமலாபால் தனியாக வசித்து வருகிறார் ஒருநாள் இரவில் அமலா பாலுக்கு போன்கால் வருகிறது அவர் அதை எடுத்து யார் என்று விசாரிக்கும் பொழுது எதிர் திசை ஒரு பெரிய பில்டிங்கில் பிரசன்னா துப்பாக்கியுடன் அமலாபால் நெற்றிக்கு குறி வைத்துக்கொண்டு நீங்கள் இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப் போறீங்க என்று சொல்ல அமலாபால் நம்பாமல் இருக்கிறார்,நீங்க நம்பலனா சாம்பிளுக்கு ஒரு டெமோ பண்ணிக்கிறேன் என்று அமலா பால் பக்கத்தில் இருக்கும் பூச்சாடியை சுடுகிறார் பிறகு உஷாரான அமலாபால் நீங்க யாரு எதற்கு என்னை கொலை பண்ண முயற்சி செய்கிறார்கள் என்று பிரசன்னாவிடம் கேட்கிறார் அதற்கு பிரசன்னா உங்க வாழ்க்கையில் நீங்க செஞ்ச தப்பு என்னன்னு ஒன்னு ஒன்னா சொல்லுங்க என்று சொல்கிறார். நான் பத்து எண்ணுவேன் அதற்குள் உண்மையை சொல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறார் அமலா பால் பயந்து தான் செய்த தப்புகளை ஒவ்வொன்றாக சொல்கிறார் குறிப்பாக தன் கர்ப்பமாக இருப்பதையும் அதை நாளைக்கு கலைக்க போகிறேன் என்று சொல்ல இறுதியில் பிரசன்னா கையில் இருக்கும் துப்பாக்கியின் புல்லட்டில் குண்டு அமலா பாலுக்கு குறி வைக்காமல் வேறொரு பெண்ணின் மீது சுட அமலா பால் என்ன என்று குழம்பி தவிக்க, பிரசன்னா சொல்லும் பதில் நீ என்னுடைய டார்கெட் இல்லை பெயரை மாற்றி போன்கால் செய்து விட்டேன் என்று சொல்லும் பொழுது அமலா பால் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறார். ஒரு திரில்லர் ஸ்டோரியாக இக்கதையை இயக்குனர் வெங்கட் பிரபு அற்புதமாக இயக்கியுள்ளார் வாழ்த்துக்கள்.

“மொத்தத்தில் இந்த VICTIM பாதிக்கப்பட்டவரின்றி எல்லோருக்குமானது”.

#victim #victimreview #victimtamilreview
victim movie review,victim review,movie review,victim telugu movie review,victim tamil movie review,victim movie review tamil,victim web series review,victim tamil review,victim,victim series review,victim telugu review,victim review telugu,review,victim movie 2022 review,sinhala movie review,victim tamil series review,the last victim review,victim anthology review,victim movie,movie review sinhala,victim webseries review,victim review tamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *