full screen background image
Search
Wednesday 29 April 2026
  • :
  • :
Latest Update

“தவமாய் தவமிருந்து” ZEE தமிழ் வழங்கும் புதிய மெகா தொடர்.. கதையில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?

வரும் ஏப்ரல் 18 முதல் ஜீதமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘தவமாய் தவமிருந்து’ தொடரில் ஒரு தாய் தந்தையின் உணர்வுபூர்ணமான பாசக் கதையில் சேர்ந்து பயணம் செய்யுங்கள்.

சென்னை , ஏப்ரல், 2022: ஜீ தமிழ் மீண்டும் ஒரு அட்டகாசமான பாசக் கதையான – தவமாய் தவமிருந்து தொடரை வழங்கவுள்ளது. தாய் தந்தையின் பாசம் பற்றி பேசும் இந்த தொடர், வரும் ஏப்ரல் 18 துவங்கி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.

பிரபல நடிகர்கள் ‘பசங்க’ சிவகுமார், மற்றும் அனிதா ஆகியோர் இதில் மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நமது வாழ்க்கையோடு நெருங்கிய கதையாக மட்டுமில்லாமல்,’தவமாய் தவமிருந்து ‘ நல்ல ஒரு பொழுதுபோக்காகவும்; வாழ்க்கை விடுக்கும் அனைத்து சவால்களையும் அவர்கள் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்தினையும் கூறுகிறது. தங்களது நான்கு பிள்ளைகளான-ரேவதி, ராஜேந்திரன், ரவி மற்றும் மலர் ஆகியோரை வளர்த்து ஆளாக்க தங்கள் வாழ்க்கையை முழுவதையும் அர்ப்பணிக்கும் தம்பதியான மார்க்கண்டேயன் மற்றும் பார்வதி ஆகியோரது கதையே ‘தவமாய் தவமிருந்து’. எல்லா பெற்றோர்களை போலவும் தங்களது குழந்தைகளுக்காக தன்னலமின்றி அனைத்தையும் அவர்கள் வழங்குகிறார்கள். ஆனால் மார்க்கண்டேயனின் பணி ஓய்விற்குப் பிறகு அவர்களது பிள்ளைகளால் கைவிடப்படுகிறார்கள்.

சுவாரஸ்யமான கதைக்களமாகும். மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியாக
இந்த தொடர் குறித்து பேசிய ZEEL நிறுவனத்தின் ஈவிபி மற்றும் சவுத் க்ளஸ்டர் ஹெட், திரு . சிஜூ பிரபாகரன் அவர்கள், “பொழுதுபோக்கினை மட்டும் வழங்காமல் நல்ல கருத்துள்ள நிகழ்ச்சிகளையும் வழங்கவேண்டும் என்பதே ஜீ தமிழின் நோக்கமாக உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பற்றிய சமூகத்தின் தவறான எண்ணத்தினை தகர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘தவமாய் தவமிருந்து’ தொடரை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது நிச்சயமாக சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தினை ஏற்படுத்தும். சேனலின் பிரைம் டைம் ஒளிபரப்பிற்கு வலுசேர்க்கும் நோக்கிலும் இத்தொடர் ஒளிபரப்பப்பட உள்ளது; எங்களது நேயர்கள் இத்தொடரை மிகவும் விரும்புவார்கள் எனவும் நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
மனதைத் தொடும் இந்த மார்க்கண்டேயன் மற்றும் பார்வதியின் உணர்வுபூர்ணமான கதையான ‘தவமாய் தவமிருந்து’ தொடரை வரும் ஏப்ரல் 18 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு கண்டு மகிழுங்கள், உங்கள் ஜீ தமிழில் மட்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *