Maanaadu Movie Review Rating: 3.5/5
#மாநாடு #மாநாடுவிமர்சனம் #சிம்பு #விமர்சனம் #maanaadu
ஒரு மாநாட்டில் முதல்வரைக் கொல்ல முயலும் கும்பலின் சதித் திட்டத்தை நாயகன் முறியடிக்க நினைத்தால் அதுவே மாநாடு.
மாஸ், பிரியாணி என்று படங்களின் பேரு மட்டுமே காட்டி, ரசிகர்களுக்குச் சோறு வைக்காத வெங்கட் பிரபு இந்தப் படத்தில் அந்தக் குறையைப் போக்கி வேற லெவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார். நாயகன் சிம்பு, குறிப்பாகத் தம்பி பிரேம்ஜியைப் பேசவிடாமல் வாய்ப்பூட்டு போட்ட விதத்திலும், டபுள் மீமிங் வசனம், அயிட்டம் சாங், தேவையில்லாத காமெடி ஆகிய வழக்கமான ஃப்ளேவர்களைத் தவிர்த்து, ஸ்கிரிப்ட்டுக்கு நேர்மையாக இருந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாத கேப்டனாக சபாஷ் பெறுகிறார்.
அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் செத்து செத்து விளையாடி, நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என அவராகச் சொல்லாமல் ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வகையில் சிம்பு அசரடிக்கிறார். சிம்புவின் மூக்கில் ரத்தம் வருவதாகக் கல்யாணி கற்பனை செய்கையில், யுவனின் பிஜிஎம் தெறிக்க மன்மதன் ரெஃபரென்ஸ் கண நேரத்தில் வந்தாலும் ரசிகர்கள் புரிந்து கரவொலியில் தியேட்டரை அதிரவைக்கிறார்கள்.
இந்த எனர்ஜியும், கதைக்கு ஏற்ற கச்சிதமான நடிப்பும், ஏன்… சிம்புவிடம் எதிர்பார்த்த அத்தனை அம்சங்களும் சேதாரம் இல்லாமல் அப்படியே கிடைக்கின்றன. கோவில், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களுக்குப் பிறகு இயக்குநரின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு அடக்கி வாசித்த சிம்பு, வந்தார் நடித்தார் ஹிட்டு ரிப்பீட்டு, வந்தார் நடித்தார் ஹிட்டு ரிப்பீட்டு இதே ரூட்டில் பயணிப்பதே அவர் ரசிகர்களுக்கு செய்யும் நியாயம்.

கெத்தான நடை, யார்றா நீ என்ற அலட்சியத் தொனி, ரகசியம் தெரிந்தவன் என்றதும் சென்டிமீட்டர் சிரிப்பை மில்லி மீட்டரில் சுருக்கும் லாவகம், டைம் லூப் அயர்ச்சியில் ரிப்பீட் ஆவது கண்டு மனச்சோர்வையும், உடல் சோர்வையும் ஒன்றாக வெளிப்படுத்தும் பாணி, கண்ணீரைக் கட்டுப்படுத்தும் திடம் என்று மிகை நடிப்பில் அநாயசமாக ஸ்கோர் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இறைவி, ஸ்பைடர், மெர்சலில் நடித்ததை அப்படியே தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். மான்ஸ்டர் நாயகனா இப்படி என்றும் நம்பமுடியாத நடிப்பில் பின்னி எடுக்கிறார்.
இருக்கு ஆனா இல்லை என்ற தொனியிலும், எஸ்.ஜே.சூர்யாவின் ஆவேசப் பேச்சையும் அப்படியே ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப பாத்திர வார்ப்பாக வடிவமைத்து டயலாக் வைத்த விதத்தில் வெங்கட் பிரபு ஜித்துதான் என்பதை நிரூபித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசும் ஒரு முக்கியக் காட்சியில் தலைவரே… தலைவரே… என்று விதவிதமான மாடுலேஷன்களில் அழைப்பது நான் மகா நடிகன்டா என்பதை நிரூபிப்பதற்கான ஒரு சோறு பதம். ரகுவரன் ஐ நோ என்று புரியாத புதிர் படத்தில் நடித்ததை அப்படியே தன் பாணியில் வேறுவிதமாக மாற்றிக் காட்டி நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் எஸ்.ஜே.சூர்யா.
விமான நிலையத்தில் கண்ணாடி விழும் வழக்கமான சம்பவம், பேனர் கலாச்சாரத்தால் பலியான பெண், முதல்வரின் பச்சைத் துண்டு, வாரிசு அரசியல் சர்ச்சை, சைக்கோ தீவிரவாதி – முஸ்லிம் தீவிரவாதி விளக்கம் என்று அரசியல் நிகழ்வுகளையும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் வெங்கட் பிரபுவின் அரசியல் பார்வையும் ஆச்சரியப்படுத்துகிறது.
அத்தனை பேரின் உழைப்பில் படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீனின் உழைப்பு மெச்சத்தகுந்தது. 100-வது படம் என்பதற்காக உயிரைக் கொடுத்து உழைத்துள்ளார். தொய்வில்லாமல் படத்தை நகர்ச்சி குழப்பமில்லாமல் கொண்டு வெங்கட் பிரபு – சிம்பு என்றாலே யுவனுக்கு இருக்கும் கூடுதல் நட்பின் வாசம் பின்னணி இசையில் தெரிகிறது.
டைம் லூஃப் என்கிற சயின்ஸ் ஃபிக்ஷன் அம்சத்தை இம்மி பிசகாமல் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திய விதம் செம்ம. அதுவும் எதிர் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அது தெரியும் என்பது திரைக்கதை சுவாரஸ்யத்துக்கு வலு சேர்க்கிறது.சிம்பு மீது எஸ்.ஜே.சூர்யா மோதி விழுவதால் அவருக்கும் அந்த டைம் லூஃப் அம்சம் கைவரப்பெறுவதாகச் சொல்வதில்தான் லாஜிக் இடிக்கிறது. ஆனாலும், இது அவ்வளவு பெரிய பிரச்சினையாக இல்லாமல் தூசி தட்டி திரைக்கதையால் நம்மைக் கட்டிப்போடுகிறர்கள். மொத்தத்தில் மாநாட்டை நடத்திக் காட்டாமலேயே படக்குழுவினர் அபூர்வ வெற்றி பெற்றுள்ளனர்.
Production: Suresh Kamatchi, V House Productions Cast: K.Karunakaran, Kalyani Priyadarshan, Premgi Amaren, S.A.Chandrashekar, Silambarasan TR, SJ Suryah, Vaagai Chandrasekhar, Y Gee Mahendran Direction: Venkat Prabhu Story: Venkat Prabhu Music: Yuvan Shankar Raja
Maanaadu from Venkat Prabhu works immensely as an entertainer package because it is always focused on the concept they are trying to depict. From scene one, what Venkat Prabhu shows you in the film is relevant for the movie to establish itself. There are no hero introduction songs, sidetrack humor, etc., to package it as a festival entertainer for the masses. The time loop concept gradually becomes a perfect podium for a cat and mouse game, making Maanaadu hilarious and unpredictable. With Silambarasan and SJ Suryah delivering memorable performances, this science fiction from Venkat Prabhu is an engrossing experience.
https://www.youtube.com/watch?v=3FuuZU21S80
Abdul Khaaliq arrives at Tamilnadu on a flight to attend the wedding of his friend. On the flight, he happens to meet a girl named Seethalakshmi, who was also going to the same wedding, and she was from the groom’s side. While coming back from that wedding, a series of unexpected events happen in the life of Khaaliq after his car met with an accident. Since the trailer hasn’t revealed much, I don’t wish to spoil it for you guys. Khaaliq eventually finds himself in the middle of a conspiracy to assassinate the CM. When he gets shot by the police, he wakes up in the same flight in which he came to Tamilnadu (Time loop!). Khaaliq’s efforts to find the people behind the whole conspiracy are what we see in Maanaadu.
The time loop is not a concept that is new to us. In fact, in one scene, Venkat Prabhu makes his characters say the names of those films that had used this concept. What I found good about this version of “Edge of Tomorrow” is the way Prabhu blends this loop concept into a setup that is very much within the framework of a typical Tamil entertainer. The writing here is extremely confident that they don’t need any distraction or diversion in the story to make it pleasing. And the acceleration of the script is gradual and peppy. The writing of the second half is the best part of this film where we are exploring the villain too. The practicality of the whole loop concept offers a lot of scope for outrageously funny sequences, and with someone like SJ Suryah getting the prime focus on those scenes, the entertainment quotient only increases.
Silambarasan as Abdul Khaaliq gets a meaty role here. It’s not a mere hero character with just a swagger. Venkat Prabhu’s Khaaliq is emotional and has limitations. And Simbu makes sure that Khaaliq comes out as a smart guy rather than an arrogant person. In terms of performance, I would say the real star is SJ Suryah. His ability to portray eccentricity without necessarily overdoing things is highly appreciable. The shift his character gets in the second half and the manner in which he pulled it off had a significant role in making this film hugely entertaining. Kalyani Priyadarshan is fine as Seethalakshmi, and her character is not a pointless addition to the script. Premgi Amaren and Karunakaran are your usual hero’s friends. YG Mahendran also plays an important role in the film.
Venkat Prabhu knows how important it is to keep the viewer totally occupied with the developments happening in the strategy of Khaaliq. And Maanaadu is a film that doesn’t decelerate at any point. And even when the film enters that full of action space, the concept allows it to explore the possibility of humor. And they achieve that without any hesitation. The script is the real star here. It challenges itself at regular intervals to keep the movie away from the viewer’s prediction. The editing is precise and enables the film to create some great set pieces that look stylish and also subtly explain the loop concept. Yuvan Shankar Raja has given the movie the kind of energetic background score it demands.
Venkat Prabhu’s crew also come to his aid in a great way. Working with predominantly two themes — the incredibly earwormy Maanaadu theme and a theme that he uses for Dhanushkodi — composer Yuvan Shankar Raja elevates the momentum of the scenes. Then, there is editor KL Praveen (for whom this happens to be his 100th film), whose razor-sharp cuts ensure that scenes never lag and at the same time clearly communicate Khaliq journeying through the time loop. This is best reflected in a well-choreographed stunt scene (Stunt Silva is the action choreographer) set in a wedding hall. Here, we see Khaliq losing ‘lives’ and progressing level by level, learning from his mistakes.Overall Maanaadu is a well made political film that wants you to take its politics seriously, while justifying the humour and science fiction tag. During an event before the film’s release, SJ Suryah had said Diwali is only on the day Maanaadu releases. Maanaadu is the latest addition in a, hopefully, long list of films where the idea of ‘hero’ is changing for the better. Consider this: a Tamil cinema star never dies. This is a given clause even in our masala cinema’s rulebook.











