full screen background image
Search
Tuesday 26 May 2026
  • :
  • :
Latest Update

செல்லப்பிராணி ‘ஆகஸ்ட்’ பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடிய நடிகர் விஷால் !

செல்லப்பிராணி ‘ஆகஸ்ட்’ பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடிய நடிகர் விஷால் !


தமிழின் முன்னணி நட்சத்திரமாக, பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பவராக, அனைவரின் மனதை நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நேற்று, மிக செல்லமாக வளர்த்து வரும் ஆகஸ்ட் பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தடபுடல் ஏற்பாடுகளுன், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார். அதனிலும் மேலாக ஆகஸ்ட் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு வீடியோ அவரது பேரன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அந்த வீடியோவில், சாப்பாட்டு மேடையில் அகஸ்டின் அமர்ந்து மனிதன் போல் உடையணிந்து கைகளால் பிஸ்கட் எடுத்து சாப்பிடுகிறது. தண்ணீர் குடிக்கிறது. இறுதியில் பின்னால் இருந்து நடிகர் விஷால் எழுந்து அந்த மேஜிக்கை நிகழ்த்திய சந்தோஷத்தில் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தனது பையன் என செல்லம் கொண்டாடும் அகஸ்டின் பிறந்த நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பது, சிறு உயிர்களிடத்திலும் பேரன்பை காட்டும் அவரது நல்ல மனதை வெளிப்படுத்துவதாக இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். பிராணியிடம் அன்பு செலுத்துங்கள்.

## johnson
Actor Vishal’s son #August s bday ☺️




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *