full screen background image
Search
Wednesday 20 May 2026
  • :
  • :
Latest Update

நடிப்பையும் பாராட்டி எழுதி நடிகராக நான் உயர காரணமான உங்களுக்கு நன்றிகள்-நடிகர் பாவல் நவகீதன்.

ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வணக்கம்,

‘மெட்ராஸ்’ படத்தில் எனது நடிப்பை பாராட்டியதோடு மட்டும் இல்லாமல், விமர்சனங்களிலும், படம் பற்றிய செய்திகளிலும் என் வேடத்தையும், நடிப்பையும் பாராட்டி எழுதி நடிகராக நான் உயர காரணமான உங்களுக்கு நன்றிகள்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் நான், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், வரும் ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள ‘திட்டம் இரண்டு’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். படத்தின் விமர்சனத்தில் என் கதாப்பாத்திரம் மற்றும் என் நடிப்பை பற்றி நீங்கள் குறிப்பிட்டால், என் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொண்டு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் பாவல் நவகீதன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *