Trident Arts நிறுவனம் புதுமையான, மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்ட படங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம். Trident Arts தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பு உள்ளது, அந்த வரிசையில் Trident Arts நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பாக “Production No 7” ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் புகழ் முன்னணி பாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். பிரபல
நடிகை நாயகியாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விளம்பர பட இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன், இந்த படத்தினை எழுதி, இயக்குகிறார். இப்படம் ரொமான்டிக், காமெடி படமாக உருவாகிறது. மே 2021 இறுதியில் படபிடிப்பு துவங்கப்பட்டு, முழுக்க, முழுக்க சென்னையில் படமாக்க படவுள்ளது.
படம் குறித்து Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R. ரவீந்திரன் கூறியதாவது….
Trident Arts நிறுவனத்தில் எப்பொழுதும் புது விதமான கதைகளை படமாக்க, ஆவலாக உள்ளோம். இயக்குனர் ஹரிஹரன், இந்த கதையை விவரிக்கும் போது காதல், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை அம்சங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணர முடிந்தது. இப்பொழுது தமிழகத்த்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோர்க்கும் மிகப்பிடித்தவர்களாக மாறியுள்ள, அஸ்வின் மற்றும் புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை, ஒன்றாக இந்த படத்தில் கொண்டுவருவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படபிடிப்பை மே மாத இறுதியில் தொடங்கவுள்ளோம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்போம்.

Trident Arts Production No.7
Cook with Comali Ashwin and Pugazh starrer
launched with ritual ceremony
Trident Arts is far-famed for churning out movies that are exceptionally unique in content and entertaining at the same time. Having won the best reception for the movies it has produced, Trident Arts has now made an official announcement on “Production No:7”. The movie features Cook with Comali fame Ashwin and Pugazh in lead roles. Talks are going on with a prominent actress to play the female lead role. Written and directed by debutant Hari Haran, an AD filmmaker the film is a romantic comedy. The shoot is scheduled to take off by end of May 2021, and will be completely filmed in Chennai.
Producer R. Ravindran, Trident Arts, says, “We at Trident Arts always look forward to exploring refreshing stories. When Director Hari Haran narrated the script, we could feel the fun, romance, and entertainment aspects to the core. We are happy to bring the greatest entertainers like Ashwin and Pugazh together, who have become the favourite of every home now. We will be kick-starting the shoot by end of May and the details about others in the cast and crew will be made shortly.”











