“YAARO”… AN EDGE OF THE SEAT SUSPENSE-THRILLER…(The Journey of 2 Friends from SILICON VALLEY to KOLLYWOOD)
It all started 10 years back, when they [Venkat Reddy & Sandeep sai] met in COGNIZANT, and both had same passion for cinema, but for Venkat Reddy it was acting and for Sandeep Sai it was direction. They use to talk a lot about everything, especially world cinema. That is when Sandeep Sai came up with an idea, which had a very unique content. After so much of discussions and research they finally arrived at “Yaaro”
So the plan for Sandeep Sai is to put down papers from Cognizant and work completely on the script, while the plan for Venkat Reddy is to pursue acting courses in film schools and in parallel working with different MNC’s (CTS, IBM, and ACCENTURE)
Elaborating on films premise, Venkat Reddy says “I personally feel story telling is most intriguing part of film making process. Of course the artists and technicians maximize and offer a wholesome product but end of the show it’s all about how interesting the story telling was. When Sandeep Sai was narrating the story I actually forgot my identity that I am going to be a part of this film and started enjoying the process as a listener. To say anything so enlarged by the initial stage might look odd, but I must admit the fact that his potentials of sketching each and every character with lots of importance kept the narration much more engrossing”
He continues on a smiling note saying “I am excited as a producer and nervous as an actor as I feel that there’s a lot of responsibility in adding more life to the role created by Sandeep Sai”
Filmmaker Sandeep Sai says, “It’s a suspense thriller that will have a pattern set against the backdrops of a murder mystery, we have tried implementing a commendable show with a unique narration and hopefully keep our fingers crossed that audience will love it”
Sandeep Sai further adds that “YAARO is about a loner [protagonist], who is being framed for a series of murders; himself becomes a target of an unknown murderer who is dangerous and insanely brutal. As the murderer’s presence is felt everywhere, the protagonist must accept one of the greatest psychological and physical challenges on his ability to unravel the mystery of murders around him “
Both signing off with a smile saying “Yaaro will be the best tamil movie of 2019 – We Challenge”.
சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”
இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் இறுதியாக “யாரோ”வுக்குள் வந்தார்கள்.
எனவே சந்தீப் சாயின் திட்டம் COGNIZANT வேலையிலிருந்து முழுமையாக விலகி ஸ்கிரிப்ட்டில் முழு நேரமும் வேலை செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் வெங்கட் ரெட்டியிடம் திரைப்பட நடிப்புப் படிப்புகளைத் தொடரவும், அதற்கு இணையாக வெவ்வேறு எம்.என்.சி.களில் (சி.டி.எஸ், ஐ.பி.எம் மற்றும் அக்சென்ச்சர்) பணிபுரியும் எண்ணம் இருந்தது.
கதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும்போது, “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை பற்றி தான் பேசப்படும். சந்தீப் சாய் இந்த கதையை விவரிக்கும் போது, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போல தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது” என்றார்.
இயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன் சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
சந்தீப் சாய் படத்தை பற்றி மேலும் கூறும்போது, “’யாரோ’ ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
“யாரோ 2019ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் – நாங்கள் சவால் விடுகிறோம்” என இருவரும் புன்னகையுடன் முடிக்கிறார்கள்.