full screen background image
Search
Friday 17 January 2025
  • :
  • :

நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி

நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கொலைக்காரன்’. அந்தப் படத்தில் கதா நாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றவர். ஆஷிம்ஆவிடம் பேசியபோது சினிமா, அழகிப் போட்டி, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி:-

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

பிறந்தது இந்தியா. படிச்சது ஆஸ்திரேலியா. படிக்கும் போது விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்கள் பிடிக்கும் என்றாலும் நான் நடிகையாகவேன் என்று ஒருப்போதும் நினைத்ததில்லை.

படிப்பு முடித்ததும் ஆஸ்திரேலியாவில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட ஒரே இந்தியப் பெண் நான் மட்டுமே. முதல் முயற்சியிலேயே ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்’ பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைப்பெற்ற அழகிப் போட்டியில் ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டம் கிடைத்தது.

அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

‘கொலைக்காரன்’ அனுபவம்?

‘கொலைக்காரன்’ என்னுடைய கேரியரில் அது பெரிய படம். படத்தில் நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் படம் முழுமை அடைந்திருக்காது. அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர்களுடைய சினிமா அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.

அடுத்து?

‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும்.
படத்துல எனக்கு டாக்டர் கேரக்டர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.
படத்தில் முக்கியமான பாத்திரத்தில் யானை நடிக்கிறது. யானையுடன் நடித்த காட்சிகள் சவாலாக இருந்தது. விலங்குகளின் டைமிங்கிற்கு ஏற்ப நடிப்பது உண்மையில் சவாலான விஷயம்.
யானையின் உடல் மொழிக்கு ஏற்றவாறு எப்படி நடித்திருப்பேன் என்று கற்பனை செய்து பார்த்தால் அதில் இருக்கும் கஷ்டம் தெரியும். யானை சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை தாய்லாந்தில் எடுத்தோம். அங்குள்ள உள்ளூர் யானை பாகனுடன் இனணைந்து வேலை செய்த போது பணிச் சுமை சற்று கூடியது. அவர்களுக்கு தாய் மொழி மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது. மொழிப்பெயர்ப்பாளரை துணைக்கு வைத்து கொண்டு தான் எடுத்தோம். அந்தப் பாகன் யானைக்கு தன்னுடைய மொழியில் எடுத்து சொல்வார். இதற்காக இரண்டு மடங்கு உழைத்தோம்.

ஒருக் காட்சியில் ஆரவ்வை என் பக்கமாக நானும் தன் பக்கமாக யானையும் இழுக்க வேண்டும். கிட்டத்தட்ட பலப்பரீட்சை மாதிரி. அந்தக் காட்சியில் நான் இழுத்த மாதிரி காட்சி அமைய வேண்டும். ஆனால் யானை நிஜமாக தன் பக்கமாக ஆரவ்வை இழுக்க ஆரம்பித்த போது பதறிவிட்டோம்.

உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்குமா?

நான் குழந்தையாக இருந்தபோது நாய், பூனை போன்ற சிறு பிராணிகளை வளர்த்துள்ளேன். அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர் செல்வதால் இப்போது நான்கு கால் ஜீவராசி எதுவும் என்னுடன் இல்லை. அந்த வகையில் ‘ராஜ பீமா’ வில் யானையுடன் நடித்தது இனிமையான அனுபவம். மற்றவர்கள் மீது கருணை காண்பிக்கும் விஷயத்தில் விலங்குகள் கிட்டத்தட்ட மனிதர்கள் போன்றது.

சினிமா நடிகையாகிவிட்டதால் முன்பு போல் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிகிறதா?

படப்பிடிப்புக்கு என்னுடைய அம்மா வருவாதால் வீட்டில் இருப்பது போல் உணர்வு கிடைக்கிறது. சில சமயம் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றால் நீண்ட நாட்கள் தங்கமாட்டேன்.

சினிமாவில் உங்களுக்கு யார் போட்டி?

போட்டி இல்லாத துறை இல்லை. போட்டி இல்லை என்றால் உழைப்பு குறைந்துவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அந்த இடத்தில் போட்டி இருக்க வேண்டும். போட்டி இல்லாமல் இருந்தால் நம்மிடம் ஏதோ குறை இருப்பது போல் தோன்றும்.

உங்கள் பொழுதுப்போக்கு?

இண்டிரீயர் டிசைனிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். மருத்துவமனை, வீடு என்று பல இடங்களில் இண்டிரீயர் பண்ணியிருக்கிறேன். தவிர, பர்னிச்சர் பிசினஸ் பண்றேன். விரைவில் டூரிசம் சார்ந்த பிசினஸ் பண்ணப் போறேன்.
சினிமாவுக்காக நடிகைகள் பிரம்மச்சாரியம் கடைப்பிடிப்பதுப் பற்றி?
மற்றவர்கள் எப்படியோ… எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. திருமணம் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. திருமணம் சிலருக்கு சீக்கிரம் நட்க்கலாம். சிலருக்கு தாமதமாக நடக்கலாம். ஆனால் வாழ்க்கைத் துணை கண்டிப்பாக வேண்டும்.

நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுவது அவர்கள் சொந்த விருப்பம். பாப்புலாரிட்டியில் இருக்கும் போதே சிம்ரன், ஜோதிகா, தீபிகா படுகோன், சமந்தா போன்றவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போ திருமணமான நடிகைகளுக்கும் பட வாய்ப்பு பிரகாசமா உள்ளது.

பிடித்த நடிகர்?

நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’ உடபட சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.

பிடித்த நடிகை?

சாவித்திரி, நயன்தாரா.

தமிழ் சினிமா பற்றி?

தமிழ் சினிமாவை மற்ற மொழிகளுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ் படங்களின் தரம் வேறு லெவலில் இருப்பதை பார்க்க முடிந்தது.

கனவு வேடம்?

சினிமாவுக்கு வந்த பிறகு குறிப்பிட்ட கேரக்டரில் மட்டும் நடிப்பேன் என்று சொல்ல முடியாது. ஒரு நடிகையா எல்லா கேரக்டரிலும் நடிப்பேன்..

கோலிவுட்டின் புதிய அழகி – ஆஷிமா நர்வால் இன்ஸ்டாகிராம் பதிவில்….

சினிமா பிரபலங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் தெரிவிக்கிறார்கள்.
சமீபத்தில் ‘கொலைகாரன்’ புகழ் ஆஷிமா நர்வால் தனது மனதில் பூட்டிவைத்திருந்த உணர்வுகளை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது…
ஒரு படத்தின் வெற்றி என்பது ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. ஒரு படக்குழு ரயில் என்ஜின் போன்றது. நீண்ட ரயில் பெட்டிகளை என்ஜின் இழுப்பது போல் படக்குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து இழுக்கும் போதுதான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
அப்படி விஜய் ஆண்டனி, அர்ஜுன் உட்பட நாங்கள் குழுவாக இழுத்த காரணத்தால்தான் ‘கொலைகாரன்’ படத்துக்கு வெற்றி கிடைத்தது.
சினிமாவைப் பொறுத்தவரை என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். ‘கொலைகாரன்’ படம் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸானது. அதேபோல்தான் தெலுங்கில் நான் நடித்த ‘ஜெர்ஸி’, ‘கில்லர்’ போன்ற படங்களும் ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸானது.
சினிமாவில் வெற்றிதான் ஒரு நடிகர், நடிகையின் மார்க்கெட்டை நிர்ணயிக்கிறது. அப்படி என்னுடைய சமீபத்திய படமான ‘கொலைகாரான்’ வெற்றியடைந்ததால் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது. சினிமாத்துறையினர் என்னை இப்போது ‘கோல்டன் ஹீரோயின்‘ என்று அழைப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய அடுத்த பதிவில் என்னுடைய புதிய படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன் – என்று பதிவிட்டிருந்தார்.

Tollywood’s New Lucky Charm
Instagram has become the latest trend among the young and famous. We have many celebrities opening up about their thoughts & feelings to their fans and audience via Instagram.
Last weekend, the movie “killer” fame Heroine Ashima Narwal also opened up about her inner feelings on instagram. She said “Acting is not just one thing, it is a combination of various elements and your team is like an engine, where everyone has a part to play and every pulley is important”. As we have already witnessed a huge success from her last movie KILLER with Vijay Antony and Arjun Sarja. There is a continuous trend that has been emerging from her previous movies..After the release of her movie Jessie, within a week extra 25 theaters were added. The same trend repeated with her movie KILLER. One week after the release of the movie, extra 60 theatres were added.
Due to this, their is a rise in sentiment in the industry among the producers and distributors that are considering her as a lucky charm and already lining up to sign new projects with her.
Industry is calling her the ‘Golden Heroine’. Everyone is eagerly waiting to see what movie she will be doing next!!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *