full screen background image
Search
Saturday 25 January 2025
  • :
  • :

2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு… தமிழில்” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. ” இனியா “

2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு… தமிழில்” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. ” இனியா ”

2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு… தமிழில்” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்..
” இனியா ”
வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா….அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்…
சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது…அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது…

தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்..

தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்..
அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன்..என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும்…ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்…நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும் ..
தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் ….ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது..

மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் “தாக்கோல்” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..
பேமிலி சப்ஜெக்ட்…கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது…

இன்னொரு சந்தோஷம் என்னன்னா..
கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட “துரோணா” ங்கிற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன்..கல்வியை மையப் படுத்தி உருவாகிற சப்ஜெக்ட்..எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும்…
தமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி..அது காபி படத்தின் மூலம் சரியாயிடும்…
மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச “பரோல்” ங்கிற படத்துக்காகவும் “பெண்களில்லா” ங்கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதா நாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு..
பரோல் படத்துக்கு பிரேம் நசீர் விருதும் “பெண்களில்லா” படத்துக்கு டி.வி சந்திரன் விருதும் கிடைச்சது…20 18 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்திச்சி…
2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா…

அறிமுகமான படத்தின் தலைப்பை போலவே இவர் நிச்சயம் வாகை சூடுவார் என்று நம்புவோம்..

2019 is a year of enthusiasm for me … I play the role of police in the film “Coffee” in Tamil.

Iniya’s debut in Tamil with Vaagai sooda vaa … In the following movies …
Recently, she was acted the movie Pottu … The role she had in the film was appreciated by many fans..

Apart from Tamil who is mingling in Malayalam with Kannada….we met ineya….she says..

I am acting in the film COFFEE Sai Krishna directed produced by Om Cine Ventures .. I an doing powerful police officer sathyabama character . In tamil ..
It is a film that will prove to me my talent … The heroine’s importance is the picture … I will be the strongest film to go to the next levell.
This film is due to be strong in Tamil …. Shootings happened in Chennai and Bangalore.

I am acting in the movie “Taakol” starring Prithviraj’s elder brother Indrajith in the film directed by Kiran in the production of Shaji Kailash.
Family Subject … shooting in Goa is happening in Kerala …

Another happiness
I has acted in the movie “Drona” Kannada Super Star Sivarajkumar. The subject of the project is to give me a good name …

It’s a small gap fall in Tamil

I am very proud that Kerala Film Critics have been awarded for the Best Second lead Award for Mammootty sir film “Parole” for the film and PENGALILLA film.
And also i got Prem Nazir award fir PAROLE and TV.Chandran Award for the film “PENGALILLA” … 20 18 I am very happy
2019 I believe will still be better …

We hope that he will definitely succeed like the title of the debut film.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *