full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

Goko Mako Movie Review

Goko Mako Movie Review

Movie rating 2/5

இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் படப்பிடிப்புகளை நடத்தி இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு உள்பட 14 துறைகளையும் கையாண்டு எழுதி இயக்கியிருக்கிறார் அருண்காந்த்.
இதில் ராம்குமார், சாம்ஸ், சாரா, தினேஷ், தனுஷா, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், சந்தானபாரதி, அஜய் ரத்னம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சுகுமாரன் சுந்தர், எடிட்டிங்-வினோத் ஸ்ரீதர், துணை இயக்குனர்-தீனா, உதவி இயக்குனர்-பிரதாப், கதை-அருண்காந்த், ஸ்ரீராம்டி.ஜன், பிஆர்ஒ-சரவணன்.

Cast: Ramkumar | Chaams | Sarah | Dinesh | Dhanusha | YG Mahendra | Delhi Ganesh | Santhana Bharathy | Ajay Rathnam

Crew: Arun Kanth (Director, Music Composer, Sound Designer), Sukumaran Sundar (Cinematographer), Vinoth Sridhar (Editor), Deena (Associate Dir), Pratap(Asst.Dir)

Directed by : Aunkanth V
Produced by : InfoPluto Media Works

Genres: Drama, Romantic Comedy, Adventure

Synopsis : An adventurous road trip journey of two lovers is being captured candidly on camera by a crazy video crew, masterminded by a musician who intend to turn this footage into a music video for a music company contract. The whole movie is a package of music, love, romance, adventure, thrill and non stop laughter. A Total Crazy Valentine’s Day Special !
USP : 100% shot with GoPro
Run Time : 1Hr 36 Min (96 Mins)
Youtube Trailer Link : https://youtu.be/i6LOrIa5Hn4
Music Label : Zee Music Entertainment

அருண்காந்த் ராப் பாடல்களை இசைத்து ஆடியோவை பிரபல இசைக் கலைஞர்களின் ஆல்பங்களை வெளியிடும் கம்பெனிக்கு அனுப்புகிறார். அந்தப் பாடல்களுக்கு பொருத்தமாக இளமை துள்ளும் வீடியோவை தயார் செய்து ஆடியோவுடன் அனுப்பினால் வெளியிடுவோம் என்று இசைக்காம்பெனியில் சொல்கின்றனர். தன் நண்பர் சாம்ஸ{டன் சேர்ந்து ராம்குமார்-தனுஷா காதல் ஜோடியினையும் இணைத்து மலைப்பிரதேசத்தில் பயணத்திற்கு அருண்காந்த் அனுப்புகிறார். அங்கே அவர்களை வைத்து எடுக்கும் காதல் கலந்த பயண அனுபவங்களை சாம்ஸ் அருண்காந்திற்கு வீடியோவாக அனுப்புகிறார். அருண்காந்தின் வீடியோ அடங்கிய பாடல்களை இசைக்கம்பெனி ஒத்துக்கொண்டதா? இல்லையா? அதன் பின் அருண்காந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதே கோகோ மாக்கோ படத்தின் கதை.
சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் கதாநாயகனாகவும், நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் , சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் காமெடி என்ற பெயரில் கேட்க முடியாத ஆங்கில உச்சரிப்பில் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.
இயக்கம்-அருணகாந்த். காதலர்கள் தினத்தில் இளைஞர்; களுக்கான ராப் இசையில் காதல், காமெடி கலந்த சாலை பயணத்தில் தன் நோக்கத்தை நிறைவேற்ற நண்பர்களின் துணையோடு சாதிக்க துடிக்கும் இசை யமைப்பாளரின் அனுபவமே இந்த கோகோ மாக்கோவின் திரைக்கதை. கோவையில் தாறு மாறாக யோசித்து எதையாவது செய்வதை கோகோ மாக்கோ என்று சொல்வார்கள் அந்த டைட்டிலை வைத்திருப்பதில் புதுமையாக யோசித்ததும், அதற்காக கதை எழுதியிருப்பதும் ஒகே ஆனால் சொல்ல வந்ததை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் ரசிக்க முடியவில்லை சிரிக்க முடியவில்லை எனலாம்.
மொத்தத்தில் கோகோ மாக்கோ இசைக்காக பயணிக்கும் காதல் அனுபவம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *